வேதியியல் :: கரிம வேதியியல்
171. ஆஸ்பிரின் என்றால் என்ன?
அசெட்டைல் சாலிசிலிகக் காடி உடல் வலிநீக்கி.
172. அட்ரோபைன் என்றால் என்ன?
ஒரு காரத்தன்மையுள்ள பொருள். மருத்துவத்தில் கண்பார்வையை விரிவடையச் செய்யப் பயன்படுவது.
173. சல்பா மருந்துகள் யாவை?
சல்பனாமைடு தொகுதியுள்ள கரிமக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்த கலவை. நச்சுயிர் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுபவை.
174. சல்பா கொனைடின் பயன் யாது?
சல்பனாமைடு, வயிற்றுப்போக்கை நீக்கும் மருந்து.
175. அபின் (ஓபியம்) என்பது யாது?
கசகசாச் செடியிலிருந்து பெறப்படும் போதைப்பொருள். கடத்தப்படும் பொருள்.
176. மெஸ்காலைனின் பயன் யாது?
வெண்ணிறத்தூள். மனமயக்க மருந்து.
177. நார்சைன் என்பது என்ன?
அபினுள்ளது, வெண்ணிறப்படிகம். தசையைத் தளர்ச்சியாக்கப் பயன்படுவது.
178. மரமரப்பிகள் என்றால் என்ன?
வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள்.
179. சினியோலின் பயன் யாது?
ஒரு கரிமப் பொருள். மருந்துகளிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுதல்.
180. குளோராபாம் என்பது யாது?
பழைய மயக்க மருந்து.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாது, என்ன, மருந்து, என்பது, பயன், பொருள், என்றால்