வேதியியல் :: கரிம வேதியியல்
161. மீத்தைல் சிவப்பு என்றால் என்ன?
காடிச்சாயம்.காடி-காரத் தகுதி பார்த்தலில் நிலைகாட்டி.
162. வெறியம் (லிக்கர்) என்றால் என்ன?
இனிப்பும் மணமும் ஊட்டப்பெற்ற ஆல்ககால் செய்பொருள். எ-டு. பிராந்தி, ஒயின்.
163. நெராலின் பயன் யாது?
நிறமற்ற நிறைவுறா ஆல்ககால். மணமூட்டும் பொருள்களில் பயன்படுவது.
164. சாண எரிவளி என்றால் என்ன?
சாணத்தை நொதிக்கச் செய்யும்பொழுது தோன்றும் வளி. அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது. சிறந்த எரிபொருள்.
165. மண்ணெண்ணெயின் பயன் யாது?
ஒரு பாரபின் அய்டிரோகார்பன். நீர்ம எரிபொருள், கரைப்பான்.
166. எரிபொருள் என்றால் என்ன?
எரிக்கும்பொழுது வெப்ப ஆற்றலைத் தரும் கரிமப்பொருள். இது இயக்கியின் (புரபெல்லண்ட்) ஒரு பகுதி. மற்றொரு பகுதி ஆக்சிஜன் ஏற்றி, எரிபொருள். எரிய உதவும் பொருள் ஆகிய இரண்டினாலும் ஆனது இயக்கி, எ-டு. ஆக்சிஜன், ஆல்ககால். இவ்விரண்டில் முன்னது எரியவைக்கும் பொருள். பின்னது எரியும் பொருள். ஏவுகணை எரிபொருள்கள் இயக்கிகள் ஆகும்.
167. தொல்படிவ எரிபொருள் என்றால் என்ன?
நிலக்கரி, எண்ணெய் முதலியவை.
168. அய்டிராசின் என்றால் என்ன?
நிறமற்ற நீர்மமான ஆற்றல்வாய்ந்த ஒடுக்கி ஏவுகணை எரிபொருள்.
169. கேசோகால் என்பது என்ன?
கேசோலின். 10-50% எத்தைல் ஆல்ககால் சேர்ந்தது. அகக்கனற்சி எந்திர எரிபொருள்.
170. வளிச்சேமிப்புமானி என்றால் என்ன?
வளிதேக்கி வைக்கும் பெரிய தொட்டி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், எரிபொருள், ஆல்ககால், பொருள்