வேதியியல் :: கரிம வேதியியல்
151. இதன் இருவகைகள் யாவை?
1. மெதிலேறு ஸ்பிரிட்
2. வடித்துப் பகுத்த ஸ்பிரிட்
152. தனி ஆல்ககாலைப் பெறுவது எவ்வாறு?
வடித்துப் பகுத்த ஸ்பிரிட்டு. 95% ஆல்ககால். இதைச் சுட்ட சுண்ணாம்புடன் சேர்த்து மேலும் வடித்துப் பகுக்கக் கிடைப்பதுவே தனி ஆல்ககால்.
153. மீத்தைல் ஆல்ககாலின் பயன்கள் யாவை?
வேறுபெயர் மெத்தனால், கரைப்பான். பிளாஸ்டிக் மற்றும் மருந்துகள் தயாரிக்க.
154. மெதிலேறு சாராயத்தின் பயன் யாது?
மெத்தனால் சேர்ந்த ஈத்தைல் ஆல்க்கால். எரிபொருள்.
155. மெத்திலின் நீலம் என்றால் என்ன?
கரையக்கூடிய ஆழ்ந்த நீலச்சாயம். ஆய்வகங்களில் சாயமேற்றிகள்.
156. இரு மீத்தைல் ஈதர் என்றால் என்ன?
நீரில் அரிதில் கரையக் கூடிய வளி. குளிர்விக்கும் பொருளாகவும் குறைவெப்பநிலைக் கரைப்பானாகவும் பயன்படுவது.
157. மீத்தைல் ஐசோ சயனேட்டு என்றால் என்ன?
அதிக நச்சுள்ளதும் ஆவியாகக் கூடியதுமான வளி. கார்பனேட்டு நுண்கொல்லிகள் செய்யப் பயன்படுதல்.
158. போபால் துன்பநிகழ்ச்சி என்பது என்ன?
மீத்தைல் ஐசோ சயனேட்டு அது உண்டாகும் நிலையத்திலிருந்து கசிந்ததால் 1984 டிசம்பர் 2இல் போபாலில் 2000க்கு மேற்பட்டோர் இறந்தனர். இதுவே போபால் துன்பநிகழ்ச்சி.
159. மீத்தைல் கிச்சிலி என்றால் என்ன?
காடிச்சாயம். பட்டுச் சாயமேற்றவும் காடிகாரத் தகுதி பார்த்தலில் நிலைகாட்டியாகவும் பயன்படுதல்.
160. மீத்தைல் பாரதியான் என்றால் என்ன?
வெண்ணிறத் திண்மம் பூச்சிக்கொல்லி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, மீத்தைல், என்றால், வடித்துப்