வேதியியல் :: கரிம வேதியியல்
141. டிரிப்டேனின் பயன் யாது?
வானப் போக்குவரவு எரிபொருள்.
142. லூசிஜன் என்பது யாது?
காற்றுடன் கலக்கப்பட்ட விளக்கு எரிஎண்ணெய்.
143. சாராயம் என்றால் என்ன?
ஈத்தேனிலிருந்து பெறப்படும் கரிமக்கூட்டுப் பொருள்.
144. இதன் பண்புகள் யாவை?
நீர்மநிலையில் உள்ளது. எளிதில் தீப்பிடிக்கும் ஆவியாகும். எரிச்சலைத் தரக்கூடிய சுவை. இனிய பழச்சாறு போன்ற மணம்.
145. இதன் பயன்கள் யாவை?
1. ஊக்கியாக இருப்பதால் குடிக்கப் பயன்படுவது.
2. அயோடின், கற்பூரம் முதலியவற்றைக் கரைப்பது.
3. எரிபொருள்.
4. மயக்க மருந்து.
146. போர்னியால் சாராயம் என்றால் என்ன?
ஒளி ஊடுருவக் கூடிய வெண்ணிறத் திண்மம். செயற்கைச் சூடமும் நறுமணப் பொருளும் செய்யப் பயன்படுவது.
147. தூய்மைப்படுத்திய ஸ்பிரிட்டு என்றால் என்ன?
எத்தனால். இது பெருமளவில் நொதித்தல் மூலம் செய்யப்படுவது. இதில் 95% மேலும் எத்தனால்
148. ஆற்றல் ஆல்ககால் என்றால் என்ன?
ஆல்ககாலுடன் பெட்ரோலைச் சேர்த்துச் செய்யப்படும் கலவை. உந்துவண்டி எந்திரங்கள், ஏவுகணை எந்திரங்கள் ஆகியவற்றின் எரிபொருள்.
149. தனி ஆல்ககால் பயன்கள் யாவை?
இது எத்தைல் ஆல்ககால். கரைப்பான். பெட்ரோலுடன் சேர்த்துத் திறன் ஆல்ககால் செய்யவும் மருந்துகள் செய்யவும் பயன்படுவது.
150. ஸ்பிரிட் என்பது யாது?
இது மெத்தனால் கலந்தது. ஒர் ஆய்வக எரிபொருள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆல்ககால், என்றால், என்ன, எரிபொருள், பயன்படுவது, யாவை, யாது