வேதியியல் :: கரிம வேதியியல்
131. பெட்ரோலியம் என்பது என்ன?
பாறை எண்ணெய் அல்லது கல்லெண்ணெய்.
132. இது எவ்வாறு கிடைக்கிறது?
கடல் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றிய அய்டிரோ கார்பன் கலவை. நிலத்திற்கடியில் பாறையடுக்குகளுக்கிடையில் காணப்படுவது. வேறு பெயர் பண்படா எண்ணெய்.
133. இதை வடித்துப் பகுக்கக் கிடைக்கும் பொருள்கள் யாவை?
டீசல், மண்ணெய்ணெய், கேசோலின், தூய்மையாக்கிய வளி, உயவிடு எண்ணெய்களும் வெண்மெழுகும் எஞ்சிய பொருளிலிருந்து கிடைக்கின்றன.
134. பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் கரும்பொருள் யாது?
நீலக்கீல்தார்.
135. பெட்ரோலியம் ஈதர் என்றால் என்ன?
ஆல்கேன் வரிசையைச் சார்ந்த கீழ்நிலை அய்டிரோ கார்பன் கலவை. முதன்மையாகப் பெண்டேன், கெக்சேன் ஆகியவற்றைக் கொண்டது.
136. பாறை எண்ணெய்ப் பொருள்கள் (பெட்ரோ வேதிப் பொருள்கள்) என்றால் என்ன?
பெட்ரோலியம் அல்லது இயற்கை வளியிலிருந்து உண்டாகும் பொருள்கள்.
137. பெட்ரோல் என்பது என்ன? பயன் யாது?
ஆவியாகக் கூடிய அரிய கலவை. ஊர்தி எரிபொருள். ஒரு நாட்டின் அதிக பொருள்வளம் இதைச் சார்ந்ததே.
138. பெட்ரோலை எப்படிப் பெறலாம்?
பெட்ரோலியத்தை வடித்துப் பகுத்துப் பெறலாம்.
139. பெட்ரோலிலுள்ள கரிமப் பொருள்கள் யாவை?
இவை முதன்மையான அய்டிரோகார்பன்கள். கெப்டேன், கெக்சேன், அக்டேன்.
140. பெட்ரோலேட்டம் என்பது என்ன?
பெட்ரோலிய இழுது. தூய்மை செய்யப்பட்ட அய்டிரோகார்பன் கலவை. அரைக்கெட்டி நிலையி லுள்ள மஞ்சள்நிற பாரபின்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பொருள்கள், என்ன, கலவை, என்பது, பெட்ரோலியம்