வேதியியல் :: கரிம வேதியியல்
121. முச்சுழல்காடி இதன் பயன் யாது?
பிளாஸ்டிக் தொழிலிலும் எஸ்தர்கள் செய்யவும் பயன்படுவது. -
122. ரப்பர் என்பது யாது?
மரப்பாலிலிருந்து செய்யப்படும் கடின மீள்பொருள். இயற்கைப் பலபடிச் சேர்மங்களில் ஒன்று.
123. ரப்பரின் வகைகள் யாவை?
1. இயற்கை ரப்பர்,
2. செயற்கை ரப்பர்.
124. செயற்கை ரப்பரின் வகைகள் யாவை?
1. தயோகால் - எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் செய்ய.
2. நியோப்ரீன் - மீன் காப்புறைகள் செய்ய.
3. பியூட்டைல் ரப்பர் - பேருந்துப்பகுதிகள் செய்ய.
4. நைட்ரைல் ரப்பர் - குழாய்கள், வானூர்திப் பகுதிகள் செய்ய. -
125. பூட்டேன் என்றால் என்ன?
மீத்தேன் வரிசை அய்டிரோகார்பன். எடுத்துச் செல்லக்கூடிய எரிபொருள்.
126. பூட்டைல் ரப்பர் என்றால் என்ன?
செயற்கை ரப்பர், டயர்கள், குழாய்கள், கொள்கலன் முதலியவை செய்யப் பயன்படுவது.
127. ஐசோபிரீனின் பயன் யாது?
செயற்கை ரப்பர் செய்ய.
128. பூட்டாடைன் என்றால் என்ன?
அய்டிரோகார்பன் வளி, செயற்கை ரப்பர் செய்யப் பயன்படுவது.
129. பூட்டானால் என்றால் என்ன?
எரியக் கூடிய நிறமற்ற நீர்மம். பிளாஸ்டிக் தொழிலிலும் ரப்பர் தொழிலிலும் பயன்படுவது.
130. பூட்டானன் என்றால் என்ன?
எரியக்கூடிய நீர்மம். பிளாஸ்டிக் தொழிலில் கரைப்பான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ரப்பர், என்றால், செய்ய, என்ன, செயற்கை, பயன்படுவது, யாது, தொழிலிலும், பிளாஸ்டிக்