வேதியியல் :: கரிம வேதியியல்

111. இவற்றின் வகைகள் யாவை?
1. வெப்பஇளகு பிளாஸ்டிக்குகள் - பாலிதீன், நைலான்.
2. வெப்பஇறுகு பிளாஸ்டிக்குகள் - பேக்லைட்டுகள், பாலியஸ்டர்.
112. பிளாஸ்டிக்குகளின் பண்புகள் யாவை?
1. நெகிழ்வற்ற உறுதிப்பொருள்கள்.
2. வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சு வார்த்து எடுக்கலாம்.
3. வெப்பத்தைத் தாங்கக் கூடியவை.
113. பிவிசி என்பது என்ன? அதன் பயன்கள் யாவை?
பாலிவினைல் குளோரைடு. இது பிளாஸ்டிக்கு வகையில் மிகப் பயனுள்ளது. குழாய்கள், கைப்பைகள், விளையாட்டுப் பொருள்கள், காலணிகள் முதலியவை செய்யப் பயன்படுவது.
114. மென்மையூட்டிகள் என்றால் என்ன?
வார்ப்பிகள். இவற்றைச் சேர்ப்பதால், ரப்பருக்கு நிலைப்புடைய அதிக வளைதலும் மீட்சியும் கிடைக்கும்.
115. வார்ப்பியத்திறன் என்றால் என்ன?
நெகிழ்திறன். அழுத்தத்தினால் தன் அளவு அல்லது வடிவத்தில் நிலையாக மாறும் பொருள்களின் பண்பு. இது பிளாஸ்டிக் என்னும் பொருளுக்குண்டு.
116. கிரிசாலின் பயன்கள் யாவை?
இது நிலக்கரித் தாரிலிருந்து கிடைப்பது. புரையத்தடுப்பி செய்யவும் சாயங்கள், வெடிமருந்துகள், பிளாஸ்டிக்குகள் செய்யவும் பயன்படுவது.
117. கிரியோசோட்டின் பயன் யாது?
நிலக்கரித் தாரிலிருந்து பெறப்படும் செம்பழுப்பு நிறமுள்ள நீர்மம். மரத்தைப் பாதுகாக்கப் பயன்படுவது.
118. பேக்லைட் என்றால் என்ன?
தொகுப்பு முறையில் செய்யப்பட்ட முதல் பிளாஸ்டிக் பொருள்களில் ஒன்று.
119. இதன் பயன்கள் யாவை?
தொலைபேசி, மின்சொடுக்கிகள், மின்காப்புப் பொருள்கள் செய்யப் பயன்படுவது.
120. அபைட்டிகக்காடி என்றால் என்ன?
உரோசினிலிருந்து பெறப்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, என்ன, என்றால், பயன்படுவது, பயன்கள், பிளாஸ்டிக்குகள்