வேதியியல் :: கரிம வேதியியல்
101. பினாசைனின் பயன் யாது?
மஞ்சள் நிறப்படிகம். சாயங்கள் செய்ய.
102. பினாயில் என்பது என்ன? பயன்கள் யாவை?
கார்பாலிகக்காடி, நஞ்சு. தொற்றுநீக்கி, சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது.
103. பூசுஎண்ணெய்கள் என்றால் என்ன?
மெருகெண்ணெய்கள். இவை நிறமற்றவை. கண்ணாடி போல ஒளிபுக விடும். பூச்சுடன் சாயம் சேர்த்தும் பூசலாம்.
104. இவற்றின் வகைகள் யாவை?
1. ஸ்பிரிட் பூசு எண்ணெய்கள் - ஆல்கஹால் சேர்க்கப்படும்.
2. எண்ணெய் வகைப் பூசு எண்ணெய். இதில் ஆளி விதை எண்ணெய் சேர்க்கப்படும்.
105. நிமிளை என்றால் என்ன?
மஞ்சள் நிற வடி உயிர்ப் பிசின். அணிகலன்களில் பயன்படுவது.
106. டைனமைட் என்பது யாது?
ஆற்றல் வாய்ந்த வெடி பொருள். நைட்ரோ கிளிசரினிலிருந்து செய்யப் பயன்படுவது. இதிலுள்ள ஏனைய பகுதிகள் மரத்தூள், அம்மோனியம் நைட்ரேட்.
107. இதன் சிறப்பு யாது?
இரண்டாம் உலகப் போரில் அதிகம் பயன்பட்டது. இதைத் தொகுத்தவர் ஆல்பிரட் நோபல். இதன் வருவாயிலிருந்து இவர் நோபல் பரிசுகளை நிறுவினார்.
108. கார்டைட்டின் பயன் யாது?
இது ஒரு வெடிகலவை. மென்மையூட்டிகளும் நிலைப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும். துப்பாக்கி வெடிமருந்து.
109. வெடிமருந்துகள் என்றால் என்ன?
விரைவான வேதிவினைக்குட்பட்டு வெப்பத்தையும் அதிக அழுத்தத்தையும் உண்டாக்கும். பொருள்கள் உண்டாக்கும் வளியின் பருமன், வெடிக்கும் மூலப் பொருளின் பருமனைவிட அதிகம். எ-டு. துப்பாக்கி மருந்து, செல்லுலோஸ் நைட்ரேட் நைட்ரோகிளைசரின், டிஎன்டி, ஆர்டிஎக்ஸ்.
110. பிளாஸ்டிக்குகள் என்பவை யாவை?
இவை பலபடியாக்கல் வினைகளில் உருவாகும் கரிமப்பிசின்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாது, என்ன, எண்ணெய், என்றால், யாவை, பயன்படுவது