வேதியியல் :: கரிம வேதியியல்
91. அவுரிச் சிவப்பு என்றால் என்ன?
இயற்கை அவுரியிலிருந்து கிடைப்பது. இண்டிகோட்டின் என்னும் வேதிப்பொருளின் மாற்றியம்.
92. சைலீனின் பயன் யாது?
இது சைலால் என்னுங் கரிமப் பொருள். சாயங்கள் உண்டாக்கப் பயன்படுவது.
93. சைலிடைன் பயன் யாது?
ஒரு கரிமப் பொருள். சாயங்கள் உண்டு பண்ணப் பயன்படுவது.
94. அனிலைன் என்றால் என்ன?
எண்ணெய் போன்ற நீர்மம், நிறமற்றது, நச்சுத்தன்மையுள்ளது, அருவருக்கும் மனம்.
95. இதன் பயன்கள் யாவை?
சாயங்கள் மருந்துகள் செய்யப் பயன்படுவது.
96. கீல்காரை என்றால் என்ன?
ஒட்டக்கூடிய அரைகெட்டிப் பொருள். கரிய நிறம். வண்ணங்களிலும் பூசும் எண்ணெய்களிலும் பயன்படுவது.
97. நீலக்கீல் என்றால் என்ன?
இது எரியக்கூடிய பல கனிமப் பொருள்களைக் கொண்டது. அவையாவன: அஸ்பால்ட், நாப்தா, பெட்ரோலியம்.
98. ஆந்தரசீன் என்றால் என்ன?
பல வளைய மூலக்கூறுள்ளதும் வெண்ணிநிறப் படிகமாக உள்ளதுமான கரிம வேதிப்பொருள்.
99. இதன் பயன் யாது?
இது சாயங்களை அளிப்பது.
100. சாந்தீனின் பயன் யாது?
கரி, அய்டிரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றின் படிகம். சாயப்பொருள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படுவது, யாது, பயன், சாயங்கள், பொருள்