வேதியியல் :: அலோகம்
81. ஓசோன் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்கள் யார்?
பேரா. பால் கிரட்சன், ஜெர்மனி, பேரா. மெரியோ மொலினா, அமெரிக்கா, 1995.
82. கண்ணாடி என்பது என்ன? பயன் யாது?
படிகமில்லாத திண்மம். மீக்குளிர்ச்சியடைந்த நீர்மங்களே கண்ணாடிகள். சோடா கண்ணாடி சீசாக்கள் செய்யவும், பொரோ சிலிகேட் கண்ணாடிகள் சமையல் பாண்டங்கள் ஆய்கருவிகள் செய்யவும் பயன்படுபவை.
83. கண்ணாடிக் கம்பளம் என்றால் என்ன?
பஞ்சுக் கம்பளத்தைப் போன்ற செயற்கைப் பொருள். ஆனால் மிக நுண்ணிய கண்ணாடியாலானது. அரிக்குந் தன்மையுள்ள நீர்மங்களை உறிஞ்சவும் வடிகட்டவும் பயன்படுவது.
84. வெண்ணாடி என்றால் என்ன?
வெண்ணிற உப்பு. தீப்பிடிக்காத துணிகள், தாள், சிமெண்டு முதலியவை செய்யப் பயன்படுவது.
85. நீர்க்கண்ணாடி என்பது என்ன?
சோடியம் சிலிகேட்டை நீரில் கரைக்கக் கிடைப்பது. பளிங்கு போன்ற கூழ்மக்கரைசல், சிலிகா இழுது தயாரிக்கவும் பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுவது.
86. இயற்கைக் கண்ணாடி என்றால் என்ன?
பளிங்கு போன்ற கணிப்பொருள். எரிமலைக் குழம்பிலிருந்து விரைவாகக் குளிர்ந்து படிகமாவது.
87. விட்டா கண்ணாடி என்றால் என்ன?
புற ஊதாக் கதிர்களைச் செலுத்தும் ஒருவகைக் கண்ணாடி
88. வைக்கார் கண்ணாடி என்றால் என்ன?
துய சிலிகாகண்ணாடி சோடியம் போராக்சைடிலிருந்து பெறப்படுவது.
89. வன் கண்ணாடி என்றால் என்ன?
பொட்டாசியம் சிலிகா அதிக அளவு கொண்ட கண்ணாடி கண்ணாடிக் கலன்கள் செய்யப் பயன்படுவது. கடினக் கண்ணாடி என்றுங் கூறலாம்.
90. தேய்ப்புக்கல் என்றால் என்ன?
இயற்கையில் கிடைப்பதும் கடினமானதுமான சிலிகான் அற்றதுமான பொருள். சானை உருளைகளில் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கண்ணாடி, என்ன, என்றால், பயன்படுவது