வேதியியல் :: அலோகம்
71. ஓசோனைடு நீராற்பகுக்கக் கிடைப்பது என்ன?
அய்டிரஜன் பெராக்சைடு, கார்போனைல் சேர்மம்.
72. ஓசோன் வெளி என்பது யாது?
காற்று மேல்வெளியடுக்கு. இங்கு ஒசோன் செறிவு அதிகம்.
73. ஒசோன் என்பது யாது? பயன்கள் யாவை?
மிகு வேதிவினையுள்ள நீலநிறவளி. புழுக்கொல்லி, காற்றையும் நீரையும் துய்மை செய்வது.
74. ஒசோனாக்கல் என்றால் என்ன?
ஒசோன் வளியோடு ஒரு பொருளைச் சேர்க்கும் முறை.
75. ஓசோனாக்கி என்றால் என்ன?
ஆக்சிஜனை ஒசோனாக மாற்றுங் கருவி.
76. ஒசோனை அழிக்கும் தனிமங்கள் யாவை?
குளோரின், புரோமின்.
77. ஓசோனடுக்கில் துளைகள் இருப்பது எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது? எவ்வாறு?
அண்டார்க்ட்டிக் வழியாகச் செயற்கை நிலா சென்றபொழுது 1985இல் கண்டுபிடிக்கப்பட்டது.
78. செப்டம்பர் 16இன் சிறப்பு என்ன?
இந்நாள் ஒசோன் அனைத்துலக நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் ஆண்டு 1995இல் கொண்டாடப்பட்டது.
79. டாப்சன் என்பது என்ன?
ஓசோனை அளக்கும் அலகுடாப்சன் என்பவர் பெயரால் அமைந்தது. இவர் காற்றுவெளி ஓசோனை ஆராய்ந்த முன்னோடி.
80. ஒசோன் குறையும் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
அமெரிக்க அறிவியலார் மெரியோ மோலினோ, ஷர்வுட் ரோலண்ட் ஆகிய இருவரும் 1974இல் கண்டறிந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, ஒசோன், என்பது