வேதியியல் :: அலோகம்
61. இதன் பயன்கள் யாவை?
முகரும் உப்பு. ரொட்டித் தொழிலிலும் சாயத் தொழிலிலும் பயன்படுவது.
62. புரோமின் என்றால் என்ன?
நீர்மநிலையிலுள்ள ஒரே உலோகம். தொற்றுநீக்கி மற்றும் சாயங்கள், புரோமைடுகள் செய்யப் பயன்படுவது.
63. குளோரினாக்கல் என்றால் என்ன?
குளோரினை நீருடன் சேர்த்து, அதிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லுதல். தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கப் பயன்படுவது.
64. குளோரின் பயன்கள் யாவை?
வெளுக்கவும், நோய் நுண்ண நீக்கியாகவும் பயன்படுவது.
65. குளோரின் இரு ஆக்சைடின் பயன்கள் யாவை?
வெளுக்கவும் நீரைத் துய்மை செய்யவும் பயன்படுதல்.
66. குளோரைட் என்றால் என்ன?
குளோரசச் காடி உப்பு.
67. குரோமிகக் காடியின் பயன்கள் யாவை?
வெளுக்கவும் சாயம் ஏற்றவும் பயன்படுவது.
68. குரோமியத்தின் பயன்கள் யாவை?
இந்த் உலோகம் தட்டுகளுக்கு முலாம் பூசவும் எஃகு செய்யவும் பயன்படுவது.
69. ஓசோன் வளியின் நன்மை யாது?
இந்த வளி கதிரவன் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயராற்றல் கதிர்வீச்சு நிலவுலகை அடையாவண்ணம் தடுக்கிறது.
70. ஓசோனாற் பகுப்பு என்றால் என்ன? பயன் யாது?
நிறைவுறா அய்டிரோ கார்பனோடு ஒசோனைச் சேர்த்தல். இதனால் ஒசோன் பிரியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, யாவை, பயன்கள், என்ன, என்றால், வெளுக்கவும்