வேதியியல் :: அலோகம்
51. கிரிப்டான் என்றால் என்ன? இதைக் கண்டறிந்தது யார்? பயன் யாது?
ஓரணு அரிய வளி, நிறமற்றது. 1898இல் இராம்சே கண்டறிந்தது. மின்குமிழ்களிலும் ஒளிவிளக்குகளிலும் பயன்படுவது.
52. கூப்பர் நிக்கல் என்பது யாது?
இயற்கை நிக்கல் அர்சனைடு நிக்கலின் முக்கியத் தாது.
53. செனாளின் பயன்கள் யாவை?
நிறமற்ற ஒற்றையணு வளி, வெப்பத் திறப்பிகள், குமிழ்கள், ஒளிர்விளக்குகள் ஆகியவற்றில் பயன்படும் மந்தவளி.
54. அம்மோனியா என்றால் என்ன?
காரமணமும் அரிப்புத் தன்மையும் கொண்ட நச்சிலா வளி.
55. இதன் பயன்கள் யாவை?
வெடிமருந்துகள் செய்யவும் உரங்கள் செய்யவும் பயன்படுவது.
56. அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன?
நீர் ஈர்க்கும் உப்பு, நிறமற்றது, படிகமற்றது. நீரில் கரையும்.
57. இதன் பயன்கள் யாவை?
வெடிமருந்து, உரம்.
58. அம்மோனியம் சல்பேட் என்றால் என்ன?
வெண்ணிறப்படிகம். உரம்.
59. அம்மோனியம் பை கார்பனேட் என்றால் என்ன?
வெண்ணிறப்படிகம், சமையல் தூள்.
60. அம்மோனியம் கார்பனேட் என்றால் என்ன?
அம்மோனிய நெடியுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அம்மோனியம், பயன்கள், யாவை