வேதியியல் :: அலோகம்
41. பிறவிநிலை அய்டிரஜன் என்றால் என்ன?
புதிதாகத் தோன்றிய அய்டிரஜன். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. அண்டிமனி, சவ்வீரம், பாகவரம் ஆகியவற்றின் அய்டிரைடுகள் உண்டாக்கப் பயன்படுவது.
42. அய்டிரஜன் என்றால் என்ன? இதைக் கண்டறிந்தவர் யார்?
ஒர் அடிப்படை வளி. ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரைக் கொடுக்கும். 1766இல் கேவண்டிஷ் இதைக் கண்டறிந்தார்.
43. அய்டிரஜன் பெராக்சைடின் பயன்கள் யாவை?
ஆக்சிஜன் ஏற்றி, புரைத்தடுப்பான், புழுக்கொல்லி, வெளுப்பி.
44. அய்ப்போ என்பது யாது? பயன் யாது?
சோடியம் தயோ சல்பேட் புகைப்படக் கலையில் பயன்படுதல்.
45. அய்ப்போகுளோரைட்டின் பயன்கள் யாவை?
சோடியம் அய்ப்போ குளோரைட் காயமாற்றி, தொற்றுநீக்கி.
46. நீர்வழிப் பிளப்பு என்றால் என்ன?
அய்டிரஜனுடன் தகுந்த வினையூக்கியைச் சேர்த்துப் பெட்ரோலியத்தையும் அதன் வழிப்பொருள்களையும் சிதைத்தல்.
47. நீரால் வடித்தல் என்றால் என்ன?
தாவரத்திலிருந்து பயன்மிகு எண்ணெய்களைப் பிரித்தல்.
48. மந்த வளிகள் யாவை?
வினை குறைவுள்ள வளிகளான ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் ரேடான். வேறு பெயர் பெரும்பேற்று வளிகள்.
49. ஆர்கான் என்னும் மந்த வளி எப்பொழுது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
1804இல் இரலே, இராம்சே ஆகிய இருவரால் கண்டு பிடிக்கப்பட்டது. மின்குமிழ்களிலும் ஒளிவிளக்குகளிலும் நிரப்பப் பயன்படுவது.
50. நியான் என்பது என்ன?
மந்த ஒரணு வளி. நியான் குறிகளிலும் விளக்குகளிலும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, அய்டிரஜன், என்றால், நியான், மந்த, பயன்படுவது, யாவை