வேதியியல் :: அலோகம்
181. நீலமணிக்கல் என்பது யாது?
நீலகுருந்தக்கல், ஒளி ஊடுருவக் கூடியது. விலை உயர்ந்த கல்.
182. மாணிக்கக்கல் (கார்னட்) என்பது யாது? பயன் யாது?
இயற்கையில் கிடைப்பது, மென்மையானது, சிலிக்கன் உள்ளது. தேய்ப்புப் பொருள். கண்ணாடித் தட்டுகளை மெருகேற்றப் பயன்படுவது.
183. ஜெர்மானியம் என்றால் என்ன? பயன் யாது?
சிலிகனை விட வீறுள்ள அரிய உலோகம். உலோகக் கலவைகள், கண்ணாடி, அரைகுறைக் கடத்திகள் ஆகியவற்றில் பயன்படுவது.
184. லூயிசைட் என்பது என்ன? பயன் யாது?
யூ.எஸ். லூயி அமெரிக்க வேதியியலர். இவர் பெயரால் அமைந்தது இந்த லூயிசைட் கொப்புள வடிவ நீர்மம். ஆர்சைன் வழிப்பொருள். வேதிப் போரில் பயன்படுவது.
185. விலங்குக்கரி என்றால் என்ன?
கரியும் (10%) கனிம உப்பும் (90%) சேர்ந்தது. நிறம்நீக்கி.
186. அனிசல்டிகைடு என்றால் என்ன?
எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது.
187. இதன் பயன்கள் யாவை?
ஒப்பனைப் பொருள்களிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுவது.
188. கேசியஸ் ஊதா என்றால் என்ன?
வெள்ளியம் (II) குளோரைடு கரைசலுடன் பொன் (III) குளோரைடு கரைசலைச் சேர்க்கப் பொன் ஒடுக்க மடைந்து ஆழ்ந்த ஊதா நிறத்தில் கூழ்மப் பொன்னும் வெள்ளிய (IV) ஆக்சைடு கூழ்மமும் சேர்ந்த கலவை கிடைக்கும். இதுவே கேசியஸ் ஊதா.
189. இதன் பயன்கள் யாவை?
1. கருஞ்சிவப்புக் கண்ணாடிகள் செய்ய.
2. உயர்வகைப் பீங்கான் பாண்டங்கள் செய்ய.
190. உலோகத்திற்கும் அலோகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பாதரசத்தைத் தவிர ஏனைய எல்லா உலோகங்களும் திண்மப் பொருள்களே. அலோகங்கள் திண்ம, நீர்ம, வளி நிலைகளில் உள்ளன. உலோகங்கள் மின்கடத்திகள் அலோகங்களில் கரி, கிராபைட் மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும். முன்னவை நேரயனிகளையும், பின்னவை எதிரயனிகளையும் உண்டாக்குபவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, யாது, பயன்படுவது, என்றால், பயன், என்பது