வேதியியல் :: அலோகம்

151. வளிமானி என்றால் என்ன?
செலவாகும் வளியை அளக்கும் கருவி.
152. புகைவளி என்றால் என்ன?
கொதிகல உலையிலிருந்து அகக்கனற்சியால் உண்டாகும் வளிப்பொருள். கரி இரு ஆக்சைடு, கரி ஓர் ஆக்சைடு ஆக்சிஜன், நைட்ரஜன், நீராவி ஆகியவை அடங்கியது.
153. தீவளி என்றால் என்ன?
மீத்தேனும் காற்றும் சேர்ந்த வெடிகலவை. நிலக்கரிச் சுரங்கங்களில் உண்டாவது.
154. தீயணைப்பான் என்றால் என்ன?
தீயை அணைக்க வேதிப்பொருளைப் பீச்சுங்கருவி அமைப்பு. பீச்சுபொருள் கரி இரு ஆக்சைடு,
155. ஈரவளி என்பது யாது?
இயற்கைவளி, நீர்ம ஹைட்ரோகார்பன்களைக் கொண்டது.
156. ஈரமாக்கி என்றால் என்ன?
நீர்ம மேற்பரப்பு இழுவிசையினைக் குறைக்கும் பொருள்.
157. சுமப்புவளி என்றால் என்ன?
வளி நிறவரைவியலில் பயன்படுவது.
158. நீர்மமாகிய வளி என்றால் என்ன?
குளிர்ச்சியினால் வளி நீர்மமாதல். எ-டு. நீர்மமாகிய பெட்ரோலிய வளி.
159. எல்என்ஜி என்றால் என்ன?
நீர்மமாகிய இயற்கை வளி.
160. எல்பிஜி என்றால் என்ன?
நீர்மமாகிய பெட்ரோலிய வளி. இண்டேன் வளி இவ்வகை சார்ந்ததே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நீர்மமாகிய, ஆக்சைடு