வேதியியல் :: அலோகம்

141. கொழுமண் என்றால் என்ன?
காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் காற்று அல்லது நீர் உள்ளே செல்ல இயலாது.
142. வெளுப்பிகள் என்றால் என்ன?
நிறம் நீக்க அல்லது வெளுக்கப் பயன்படும் வேதிப் பொருள்கள். எ-டு குளோரின், கந்தக இரு ஆக்சைடு.
143. வெளுக்கும் தூள் என்றால் என்ன?
சலவைத்தூள். வெண்ணிறத்தூள். கால்சியம் ஆக்சி குளோரைடு. நீரிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லப் பயன்படுவது.
144. எபோனைட் என்றால் என்ன?
வல்கனைட் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கிச் செய்யப்படும் கடினமான கரிய காப்புப் பொருள்.
145. நிலைவளி என்றால் என்ன?
அழுத்தத்தால் மட்டுமே நீர்மமாக்க இயலாத வளி. தன்மாறுநிலை வெப்பநிலைக்கு மேலுள்ளது.
146. வளித்துப்புரவு என்றால் என்ன?
வளிகளிலுள்ள மாசுகளையும் கறைகளையும் நீக்கும் செயல்.
147. வளி ஏற்பி என்றால் என்ன?
தாரிலிருந்து நிலக்கரி வளியை நீக்குங் கருவி.
148. வளி உருளி என்றால் என்ன?
வேதிப்பொருள்கள் நிரப்பப் பயன்படும் கண்ணாடிக் கலன். ஆக்சிஜன், அய்டிரஜன் ஆகியவற்றைத் தயாரித்து நிரப்பப் பயன்படுவது.
149. வளி ஒளி என்றால் என்ன?
வளி எரிவதால் உண்டாகும் வெளிச்சம்.
150. வளிநீர்மம் என்றால் என்ன?
வளியாக்கத்தில் பெறப்படும் அம்மோனியாவும் அம்மோனியம் உப்புகளும் சேர்ந்த கலவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படுவது, அல்லது