வேதியியல் :: அலோகம்
131. இதன் முக்கியத் தொகுதிகள் யாவை?
1. சேயோலினடை.
2. கேலாய்சைட்
3. இலைட்
4. மாண்ட்மாரிலோனைட்
5. வெர்மாகுலைட்
132. பொரான் கார்பைடு என்றால் என்ன?
மிகக் கடியதும் கரியதுமான படிகச் சேர்மம். அணுஉலையில் சீராக்கி, தேய்ப்புப் பொருள்.
133. பொரான் நைட்ரைடு என்றால் என்ன?
வழுக்கும் வெண்ணிறப் பொருள். உயவிடு பொருள், மின்தடைப் பொருள்.
134. வெண்காரம் என்றால் என்ன?
பெரானின் முதன்மையான தாது. மஞ்சளும் நீலமும் கலந்த நிறமும் சேர்ந்த கனிமம். வெண்ணிறப்படிகம் நச்சுத்தடை, துப்புரவுப்பொருள்.
135. பொரான் என்றால் என்ன?
அலோக மஞ்சள் நிறப்படிகம். போரிகக்காடியாகவும் வெண்காரமாகவும் உள்ளது. இரும்பு வார்ப்பதிலும் எஃகைக் கடினப்படுத்துவதிலும் பயன்படுவது.
136. பிஸ்மத்தின் பயன்கள் யாவை?
இது உலோகக் கலவை செய்யவும் இதன் கூட்டுப் பொருள்கள் ஒப்பனைப் பொருள்களிலும் மருந்துகளிலும் பயன்படுகின்றன.
137. பதமாக்கல் என்றால் என்ன?
சிமெண்டு இறுகும்பொழுது வெடிக்காமல் இருக்க, அதன்மீது தொடர்ந்து நீரை ஊற்றுதல். பூச்சுவேலை நடந்த மறுநாள் இது நிகழும்.
138. சிமெண்டு என்றால் என்ன?
இது ஒரு கட்டுமானப் பொருள். இது 1824இல் ஆங்கில நாட்டைச் சார்ந்த கொத்தனார் ஜோசப் ஆஸ்பிடின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காரை கால்சியம் சிலிகேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் கலவை. இதில் சிறிது ஜிப்சமும் உண்டு.
139. சிமெண்டு இறுகுதல் என்றால் என்ன?
சிமெண்டு என்னும் படிகாரை நீரை உட்கவர்ந்து கெட்டிப்பொருள் ஆதல், இக்காரையிலுள்ள சேர்மங் களின் நீரேற்ற வினையும் இவ்வினையைத் தொடர்ந்து கால்சியம் சிலிகேட் சேர்மங்கள் சிதைவடைவதும் இதற்குக் காரணங்கள் ஆகும்.
140. வனைபொருள்கள் என்றால் என்ன?
அதிக உருகுநிலையிலுள்ள கனிமங்கள், பயனுள்ளவை. எ-டு மட்பாண்டம், பீங்கான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பொருள், சிமெண்டு, கால்சியம், பொரான்