வேதியியல் :: அலோகம்
121. கந்தகக் காடியின் சிறப்பென்ன?
கனிமக் காடிகளில் மிகச் சிறந்தது. ஒரு நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவது.
122. இது எம்முறையில் பெரிய அளவில் உண்டாக்கப்படுகிறது?
தொடுமுறையில்.
123. இதன் பயன்கள் யாவை?
நீர்நீக்கி ஆக்சிஜன் ஏற்றி உரங்கள் செய்யப் பயன்படுவது.
124. கந்தசக் காடியை எவ்வாறு பெறலாம்?
கந்தக மூவாக்சைடை நீரில் கரைத்துப் பெறலாம். ஒடுக்கி.
125. கந்தக மூவாக்சைடின் பயன்கள் யாவை?
கந்தகக்காடி தயாரிக்கவும் வளிகளை உலர்த்தவும் பயன்படுவது.
126. அயோடினின் பயன்கள் யாவை?
கருநிற ஊதாப்படிகம். வேதிப்பகுப்பிலும் மருத்துவத் திலும் பயன்படுவது. உணவில் அயோடின் ஊட்டங் குறையுமானால் தொண்டைக் கழலை உண்டாகும்.
127. அயோடோபென்பாசின் பயன் யாது?
சீரான மணமுள்ள நிறமற்ற படிகம். பூச்சிக்கொல்லி.
128. அயோடபாமின் பயன் யாது?
அயோடின் சேர்மம். குங்கும மனம். புரைத்தடுப்பான்.
129. களிமண் என்றால் என்ன?
பிளாஸ்டிக் தன்மை, ஈரநிலையில் ஊடுருவாமை. உலர்ந்தால் வெடித்தல் ஆகியவை இதன் பண்புகள். களிக் கனிமங்களாலானவை.
130. களிமண் கனிமங்கள் என்றால் என்ன?
மிகச்சிறிய துகள்கள்; அலுமினிய நீர்ச் சிலிகேட்டுகளாலானது. அடுக்கு அமைப்பும் படிகத்தன்மையும் கொண்டவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, யாவை, பயன்கள்