வேதியியல் :: அலோகம்
111. பாசுவரத்தின் பயன்கள் யாவை?
வெண்பாசுவரம் புகைத்திரைகள், வெடிகுண்டுகள் செய்யப் பயன்படுவது. சிவப்புப் பாசுவரம் தீப்பெட்டிகள் செய்யப் பயன்படுவது.
112. எலிநச்சாகப் பயன்படுவது எது?
வெண்பாசுவரம்.
113. பாசுவர காந்தி என்றால் என்ன?
பாசுவரம் இருட்டில் ஒளிர்வதற்குப் பாசுவர காந்தி என்று பெயர்.
114. வெண்பாசுவரம் ஏன் நீரில் வைக்கப்பட்டுள்ளது?
அது அறைவெப்ப நிலையில் காற்றில் எரிவது. ஆகவே, நீரில் வைக்கப்பட்டுள்ளது.
115. சூப்பர் பாஸ்பேட் என்பது என்ன?
கால்சியம் அய்டிரஜன் பாஸ்பேட் சிறந்த உரம்.
116. வெண்சவ்வீரம் என்றால் என்ன?
வெண்ணிறப்படிகம். நச்சுத்துண்டில்களில் பயன்படுவது.
117. கந்தகத்தின் சிறப்பு யாது?
குறைந்த உருகுநிலை கொண்ட அலோகம்.
118. இதன் மூன்று வேற்றுருக்கள் யாவை?
1.சாய்சதுரக் கந்தகம்.
2. பட்டைக்கந்தகம்.
3 களிக்கந்தகம்.
119. காந்தகத்தின் பயன்கள் யாவை?
தொற்றுநீக்கி, பூச்சிக் கொல்லி, கந்தக மருந்துகள் செய்வதில் பயன்படுதல்.
120. கந்தகமாக்கல் என்றால் என்ன?
ஒரு தனிமம் அல்லது கூட்டுப் பொருளைக் கந்தகத்தோடு சேர்த்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, பயன்படுவது, வெண்பாசுவரம், என்றால், யாவை