வேதியியல் :: அலோகம்
101. நின்றொளிரும் உப்புகள் யாவை?
கார வகை உலோக உப்புகள். அலுமினியச் சேர்மங்கள், யுரேனியம், பிளாட்டினம் உப்புகள்.
102. நின்றொளிர்தலின் இயல்பு யாது?
பொருள் சிறியதாக இருந்தால் அதில் முழுதும் நின்றொளரிர்தல் நிகழும். ஒளிச்செறிவையும் அலை நீளத்தையும் பொறுத்து அது அமையும்.
103. இந்த ஒளிர்தலின் பயன் யாது?
புறச்சிவப்பு நிற ஒளி இதை அழிக்கும். இப்பண்பு புறச் சிவப்பு நிற ஒளியை அறியப் பயன்படுவது.
104. பால்மெயின் ஒளிருங் குழம்பு என்றால் என்ன?
ஒளிர்வான கதிரவன் ஒளியினால் இருட்டில் பல மணி நேரம் நின்றொளிர்வது இது. இதில் கால்சியம், பேரியம், ஸ்டிரான்ஷியம் சல்பைடுகள் கலந்துள்ளன.
105. பாசுவரிக அமிலம் என்பது யாது?
வெண்ணிறத் திண்மம். இதன் உப்பு பாஸ்பேட் நீரை மென்மையாக்கவும் உரமாகவும் பயன்படுவது.
106. பாஸ்போரஜன் என்றால் என்ன?
இது மற்றொரு பொருளில் நின்றொளிர்தலை உண்டாக்கும் பொருள். துத்தநாகச் சல்பைடில் மாங்கனீஸ் இரு சல்பைடு இதை உண்டாக்கும்.
107. பாசுவரிகக்காடிப் பகுப்பு என்றால் என்ன?
பாசுவரிகக் காடியின் தனிமங்களைப் பகுத்து ஒரு சேர்மத்தின் மூலக்கூறில் சேர்த்தல்.
108. பாசுவரச் சேர்மமாக்கல் என்றால் என்ன?
சர்க்கரையைப் பாகவரத்தின் கூட்டுப் பொருள் ஆக்கும் முறை. இக்கூட்டுப் பொருளைப் பிரிக்க உயிர்ச் செயல்களுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.
109. பாசுவரம் என்பது யாது?
ஒர் அலோகத்தனிமம், கெட்டிநிலையில் உள்ளது.
110. இதன் பண்புகள் யாவை?
1. புற வேற்றுமை உண்டு. வெண்பாசுவரம், சிவப்புப் பாசுவரம்.
2. வெண்பாசுவரம் இருட்டில் ஒளிரும் காற்றில் எரியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, யாது, என்றால், பொருள், உப்புகள்