வேதியியல் :: அலோகம்
91. அராபினோஸ் என்றால் என்ன?
நீரில் கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். குச்சி வடிவ உயிர்களை வளர்க்கப் பயன்படும் கரைசலில் பயன்படுவது.
92. செயற்கைப் பொன் என்றால் என்ன?
நீரில் கரையா மஞ்சள் நிற மாநிறத் தூள். போலிப் பொன் முலாம் பூசப் பயன்படுவது.
93. பாஸ்பைன் என்பது யாது? பயன்கள் யாவை?
அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வளி. புகைத்திரை செய்யவும் கப்பல்களுக்குக் கோல்கம் குறிகாட்டவும் பயன்படுவது.
94. பாஸ்பீனிகக்காடி என்றால் என்ன?
நிறமற்ற படிகம். இதன் உப்புகளில் சில நரம்பு மருந்துகள்.
95. பாஸ்பைட் என்பது என்ன?
பாசுவரிசக் காடி உப்பு.
96. பாஸ்பமிடான் என்பது என்ன? பயன் யாது?
அர்கனோ பாஸ்பேட் உப்பு. பூச்சிக் கொல்லி,
97. இதைத் தொகுத்தவர் யார்?
1955இல் பெரிகர் என்பவர் முதன்முதலில் தொகுத்தார்.
98. பாஸ்பைடு என்றால் என்ன?
பாசுவர கூட்டுப் பொருள். எ-டு. கால்சியம் பாஸ்பைடு.
99. பாஸ்போனிகக்காடி என்றால் என்ன?
பாசுவரசக்காடி பாஸ்பைட்டு உப்பைக் கொடுப்பது.
100. நின்றொளிர்தல் என்றால் என்ன?
கால்சியம் பேரியம் சல்பைடுகளின் மீது சிறிது நேரம் ஒளியூட்டிப் பின் அவற்றை இருட்டில் வை. அவை சிறிது நேரம் ஒளிரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், என்பது, பயன்படுவது