வேதியியல் :: உலோகம்
81. எட்டிரியத்தின் பயன் யாது?
வெண்ணிற உலோகம். உலோகக் கலவைகள் செய்ய.
82. சீயோலைட்டின் பயன்கள் யாவை?
நீரேற்றிய அலுமினோ சிலிகேட் தொகுதியில் ஒன்று. இயற்கையாகக் கிடைப்பது. சர்க்கரையைத் துய்மைப்படுத்தவும் கடின நீரை மென்னிராக்கவும் பயன்படுவது.
83. வெண்ணியத்தின் பயன்கள் யாவை?
காரீய (II) கார்பனேட்டு அய்டிராக்சைடு. வெள்ளை வண்ணக் குழைவிலும் வண்ணக் குழைவிலும் இதன் நிறமி பயன்படுவது.
84. வெனாடியத்தின் பயன்கள் யாவை?
கடினமும் உறுதியும் வாய்ந்த உலோகம். இது வெனாடியம் எஃகுவும் அதன் சேர்மங்களும் செய்யப் பயன்படுவது.
85. பாரிஸ் சாந்து என்பது யாது? பயன்கள் யாவை?
தூள்நிலைக் கால்சியம் சல்பேட்டு. வார்ப்பு அச்சுகள் செய்யவும் முறிந்த எலும்புகளுக்குக் கட்டுப்போடவும் பயன்படுவது.
86. நீற்றின சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் அய்டிராக்சைடு.
87. சுட்ட சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் ஆக்சைடு.
88. சுட்ட சுண்ணாம்பின் பயன் யாது?
நீரை உறிஞ்சுவது.
89. சலவைத்தூள் என்றால் என்ன?
வெண்ணிறத்தூள், CaOCl2, தொற்று நீக்கி.
90. நீற்றின சுண்ணாம்பின் வேதிப்பயன் என்ன?
கால்சியம் அய்டிராக்சைடு, வெற்றிலைப் பாக்குப் போடுவதில் பயன் படுவது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சுண்ணாம்பின், என்ன, கால்சியம், பயன்படுவது, பயன்கள், யாவை, யாது, அய்டிராக்சைடு, பயன்