வேதியியல் :: உலோகம்
![Metals](images/metals.jpg)
71. இதன் பழைய பெயர் என்ன?
மெய்யறிவாளர் சம்பளம்.
72. துத்தச்சல்பேட்டின் பயன்கள் யாவை?
நீரில் கரையா வெண்ணிறப் படிகம். மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது.
73. துத்தநாகத்தின் பயன்கள் யாவை?
கடின உலோகம். நாகமுலாம் பூசவும் வெண்கலம் செய்யவும் பயன்படுவது.
74. துத்தநாகத்தின் முதன்மையான தாது எது?
சிங்க பிளண்டு, துத்தநாகச் சல்பைடு.
75. துத்தநாகக் கார்பனேட்டின் பயன் யாது?
மென்மையான வெண்ணிறத்தூள். காலமைன்கரைசலில் பயன்படுவது. தோல்நோய் மருந்து.
76. துத்தநாகக் குளோரைடின் பயன்கள் யாவை?
அதிகம் நீர் இருக்கும் வெண்ணிறப் பொருள். நீர் நீக்கும் பொருள். மரத்தைப் பாதுகாப்பது. துத்தநாக ஆக்சைடுடன் சேர்ந்த பசை பற்காரையாகப் பயன்படுவது.
77. துத்தச் சல்பைடின் பயன் யாது?
வெண்ணிறப் பொருள். வண்ணக் குழைவுகளில் நிறமி.
78. சிர்கோனியத்தின் பயன்கள் யாவை?
அரிய உலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் தீச்சுடர்த் தடைச் சேர்மங்கள் செய்யவும் பயன்படுவது.
79. சிர்கோனியம் சிலிகேட்டின் என்றால் என்ன?
சிறிது மஞ்சள் நிறமுள்ளது. நீரில் கரையாது. வெள்ளையாக இருப்பின் மாணிக்கம். நிறமாக இருப்பின் உருகாப் பொருள்.
80. எட்டர்பியத்தின் பயன் யாது?
வெள்ளி போன்ற உலோகம்.எஃகின் பண்பை உயர்த்தப் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, பயன்கள், பொருள், யாவை, யாது, பயன், உலோகம், வெண்ணிறப், செய்யவும்