வேதியியல் :: உலோகம்
241. பாதரச பல்மினேட்டு என்பது என்ன?
இது ஒரு வெடிபொருள். நைட்டிரிகக் காடியில் பாதரசத்தைக் கரைத்து, அதனுடன் ஆல்ககாலையும் சேர்க்க இப்பல்மினேட்டு கிடைக்கும்.
242. பொன் என்றால் என்ன? பயன் யாது?
தங்கம். ஒளிர்வான மஞ்சள் நிற உலோகம். அரசநீர்மத்தில் மட்டுமே கரையும். பல்கட்டவும் உலோகக் கலவை செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுவது.
243. ரேடியத்தின் பயன்கள் யாவை?
இது ஒரு கதிரியக்கத் தனிமம். புற்றுநோய் மருத்துவத்திலும் ஒளிமின்கலம் செய்வதிலும்
வானொலிக் குழாய்கள் செய்வதிலும் பயன்படுவது.
244. மக்னீசியத்தின் பயன்கள் யாவை?
வெண்ணிறக் காரமண் உலோகம். கூசொளி குமிழ்களிலும் பல கரிமச் சேர்மங்கள் செய்யவும் சிலிக்கனைப் பிரிக்கவும் பயன்படுவது.
245. மக்னீசியம் கார்பனேட்டின் பயன் யாது?
வெண்ணிறத்தூள். மருந்துகளில் கடினத்தன்மையைப் போக்கப் பயன்படுவது.
246. மக்னீசியம் குளோரைடு என்றால் என்ன?
நீரற்ற உப்பு. நெசவுத்தொழிலில் பயன்படுவது.
247. மக்னீசியம் அய்டிராக்சைடின் பயன் யாது?
வெண்ணிறத்துள. கழிவுப் பாகிலிருந்து சர்க்கரையைப் பிரிக்கப் பயன்படுவது.
248. மக்னீசியம் ஆக்சைடின் பயன்கள் யாவை?
வெண்ணிறத்தூள். காடித்தன்மையைத் திருத்தும் மருந்துகள் செய்யவும் உலைகளில் வெப்பத்தடைக் கரைகள் அமைக்கவும் பயன்படுவது.
249. மக்னீசியம் சல்பேட்டின் பயன்கள் யாவை?
திட்டமான ஒளிபுகும் படிகம். பேதிமருந்து. நிறம் நிறுத்தி.
250. பல்லாடியம் என்பது யாது? பயன்கள் யாவை?
மாறுநிலை வெண்ணிற உலோகம். அய்டிரஜன் செலுத்தும் வினைகளில் ஊக்கி. அணிகலன்கள் செய்யவும் உலோகக் கலவைகள் செய்யவும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, செய்யவும், யாவை, மக்னீசியம், பயன்கள், யாது, பயன், உலோகம், என்ன