வேதியியல் :: உலோகம்
231. அண்டமணி ஐங்குளோரைடு என்றால் என்ன?
நிறமற்ற நீர்மம். வலுவான குளோரின் ஏற்றும் பொருள்.
232. அண்டிமனி சல்பேட் என்றால் என்ன?
கரையா வெண்ணிறப் படிகம். வெடிமருந்தில் பயன்படுவது.
233. அண்டிமனி ஐஞ்சல்பைடு என்றால் என்ன?
நீரில் கரையா மஞ்சள் நிறத்தூள். ரப்பரை வன்கந்தகமாக்கப் பயன்படுவது.
234. அண்டிமனி முக்குளோரைடு என்றால் என்ன?
நீர் உறிஞ்சும் வெண்ணிறமானதும் மென்மையானதுமான திண்மம். மருந்துப் பொருளாகவும், குழல்களைத் துப்புரவு செய்யவும் பயன்படுவது.
235. இங்குலிகம் என்றால் என்ன?
பாதரசத்தின் முதன்மையான தாது.
236. பாதரச மரம் என்றால் என்ன?
சிறிது பாதரசத்தை வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலோடு சேர். மரவளர்ச்சி ஒத்த வெள்ளி இரசக்கலவை உண்டாகும். இதற்குப் பாதரச மரம் என்று பெயர்.
237. இரசக்கலவை என்றால் என்ன?
இரும்பு தவிர்த்த ஏனைய உலோகங்களோடு பாதரசம் சேரும்பொழுது உண்டாகும் கலவை.
238. மெர்க்குரிக் அயோடைடின் பயன் யாது?
செந்நிற வீழ்படிவு. தோல் நோய் மருந்துகளில் பயன்படுவது.
239. மெர்க்குரிக ஆக்சைடின் பயன் யாது?
மஞ்சள் நிறத் திண்மம். கண்ணழற்சி மருந்து.
240. பாதரசத்தின் பயன்கள் யாவை?
நீர்மநிலையிலுள்ள உலோகம். வெப்பநிலைமானிகளில் நிரப்பும் நீர்மம். பல் மருத்துவத்தில் பயன்படுவது. புறஊதாக் கதிர்களின் மூலம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படுவது, அண்டிமனி