வேதியியல் :: உலோகம்
221. எர்பியம் என்பது யாது?
மென்மையான உலோகம். தகடாக்கலாம். உலோகவியல், கண்ணாடித் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது.
222. இண்டியம் என்பது யாது?
வெண்ணிற உலோகம். பல்லில் பயன்படும் உலோகக் கலவையிலும் மின்முலாம் பூசுவதிலும் பயன்படுவது.
223. ஐஎன்பி படிகம் என்றால் என்ன?
இண்டியம் பாஸ்பேட் படிகம். கணிப்பொறி முதலிய மின்னணுக் கருவியமைப்புகளில் சிலிகனுக்கு மாற்றாக அமைந்து புரட்சியை உண்டுபண்ண இருப்பது. செயல்திறத்தில் சிலிகானைவிடப் பன்மடங்கு உயர்ந்தது. இந்தியா இதனை உருவாக்கிய எட்டாவது நாடு. சென்னை அண்ணா பல்கலைக்கழகப் படிகவளர்ச்சி தேசிய மையம் இதனை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
224. இரிடியத்தின் பயன்கள் யாவை?
அரிய உலோகம். மூசைகள் செய்யவும், பேனா முட்கள் செய்யவும் பயன்படுவது.
225. பொலோனியத்தின் சிறப்பென்ன?
யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ள கதிரியக்கத்தனிமம். இதற்கு 30க்கு மேற்பட்ட ஒரிமங்கள் உண்டு. எல்லாம் ஆல்பா துகள்களை உமிழ்பவை. செயற்கை நிலாக்களில் மின் வெப்ப ஆற்றல் ஊற்றாக பொ210 பயன்படுகிறது.
226. புளுட்டோனியத்தின் சிறப்பென்ன?
அதிக நச்சுள்ள கதிரியக்கத் தனிமம். யுரேனிய தாதுக்களில் சிறிதளவுள்ளது.
227. இது எவ்வாறு பெறப்படுகிறது? பயன் யாது?
இயற்கை யுரேனியத்தை அல்லணுவினால் குண்டாகக்கொண்டு பிளக்க பு-239 கிடைக்கும். இது எளிதில் பிளவுபடுவதால் அணுக்கரு எரிபொருள்; அணுக்கரு வெடிபொருள்.
228. டிஸ்புரோசியம் என்பது யாது?
அரிய புவித்தனிமங்களில் ஒன்று. அணு உலையில் உறிஞ்சியாகப் பயன்படுவது.
229. கேடோலியம் என்பது என்ன?
வெண்ணிற உலோகம். கம்பியும் தகடுமாக்கலாம். உலோகக் கலவைகள் செய்யவும் மின்னணுத் தொழிலிலும் பயன்படுவது.
230. அண்டிமனி என்றால் என்ன?
நொறுங்கக் கூடிய வெள்ளிநிற உலோகம். அரிதில்கடத்தி. அச்சுஉலோகம் செய்யப் பயன்படுவது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, உலோகம், என்பது, யாது, செய்யவும், என்ன