வேதியியல் :: உலோகம்
201. கசடு என்றால் என்ன?
உலோகத் தாதுக்களைப் பிரிக்கும்பொழுது உண்டாகும் கழிவு. இளக்கியினால் உண்டாவது. மிதப்பதால் எளிதில் வெளியேறக் கூடியது.
202. யூரப்பியம் என்றால் என்ன?
வெள்ளிநிற உலோகத் தனிமம். எட்ரிய யூரேப்பிய ஆக்சைடு கலவையில் முதன்மையாகப் பயன்படுவது. இந்த ஆக்சைடுகள் தொலைக்காட்சித் திரைகளில் சிவப்புப் பாசுவரமாகப் பயன்படுவது.
203. சமாரியம் என்பது என்ன? அதன் பயன் யாது?
வெள்ளிநிறத் தனிமம். உலோகவியல், கண்ணாடித் தொழில், அணுத்தொழில் ஆகியவற்றில் பயன்படுவது.
204. சோடியம் அசைடின் பயன் யாது?
நிறமற்ற படிகம். வெடிமருந்துகளில் பயன்படுவது.
205. சோடியம் பெனிசோயேட்டின் பயன்கள் யாவை?
நீரில் கரையும் வெண்ணிறத்தூள். உணவுப் பாதுகாப்புப் பொருள். நச்சுத்தடை
206. சோடியம் இருகார்பனேட்டின் பயன்கள் யாவை?
வெண்ணிறத் திண்மம். ஆப்பச்சோடா. அமிலம் நீக்கி. நுரைக்கும் பானங்களில் பயன்படுதல்.
207. சோடியம் கார்பனேட்டின் பயன்கள் யாவை?
சலவைச்சோடா. வெண்ணிறப் பொருள் எரிசோடா, கண்ணாடி, சவர்க்காரம் ஆகியவை செய்யப் பயன்படுவது.
208. எம்முறையில் இது பெரிய அளவில் செய்யப்படுகிறது?
சால்வே முறையில்.
209. சோடியம் குளோரேட்டின் பயன்கள் யாவை?
நிறமற்ற கரையும் படிகம். நச்சுத்தடை ஆக்சிஜன் ஏற்றி. வெடிமருந்துகளில் பயன்படுவது.
210. எப்சம் உப்பு என்றால் என்ன?
மக்னீசியம் சல்பேட் பேதிமருந்து, நிறம் நிறுத்தி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, சோடியம், யாவை, பயன்கள், என்ன, என்றால்