வேதியியல் :: உலோகம்
191. பைரைட் என்பது யாது?
இரும்புத்தாது. எ-டு இரும்புச்சல்பைடு.
192. இரும்பின் மூன்று வகைகள் யாவை?
1. காமா இரும்பு. 2. ஆல்பா இரும்பு. 3. டெல்டா இரும்பு.
193. பெரிக்குளோரைடின் பயன்கள் யாவை?
மாநிற மஞ்சள் நிறப் படிகம். மருந்துகளில் பயன்படுவது. ஆய்வக வினையாக்கி.
194. பெரிக் ஆக்சைடின் பயன் யாது?
சிவந்த மாநிறம். நிறமி, நிலைநிறுத்தி. இயற்கையில் ஹேமடைட் தாது.
195. பெரிக் சல்பேட்டின் பயன் யாது?
பருமனறிபகுப்பில் பயன்படுவது.
196. பெரசச் சல்பேட்டின் பயன்கள் யாவை?
பசுந்துத்தம். தோல் பதனிடல், சாய்த்தொழில் ஆகியவற்றில் பயன்படுவது. பருமனறி பகுப்பில் வினையாக்கி.
197. உயர்விரைவு எஃகு என்றால் என்ன?
உயர்விரைவு கடைசல் எந்திரங்களில் கருவிகளை வெட்டப் பயன்படும் எஃகு.
198. வார்ப்பிரும்பு என்றால் என்ன?
இரும்பு உலோகக் கலவை. 2-5% கரியும் மற்ற மாசுகளும் உள்ளன. இதிலிருந்து எஃகு கிடைப்பது. இது குழாய்கள், அடுப்புகள், விளையாட்டுப் பொருள்கள் முதலியவை செய்யப் பயன்படுவது.
199. மென்னிரும்பு என்றால் என்ன? பயன் யாது?
ஆல்பா இரும்பு. கரி குறைவாக உள்ளது. காந்த ஆற்றல் நிலைத்திராது. வரிச்சுற்றுகளில் பயன்படுவது.
200. தேனிரும்பின் பயன்கள் யாவை?
மிகத்துய இரும்பு. கரி இல்லாதது. வார்ப்பிலிருந்து பெறப்படுவது. சங்கிலிகள், கம்பி, ஆணிகள் செய்யப் பயன்படுவது. தகடாக்கலாம், கம்பியாக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இரும்பு, பயன்படுவது, யாவை, யாது, என்ன, என்றால், பயன், பயன்கள், எஃகு