வேதியியல் :: உலோகம்

181. அலுமினா என்றால் என்ன?
அலுமினியம் ஆக்சைடு. வடிவமற்ற வெண்ணிறப் பொருள். இயற்கையில் குருந்தக்கல்லாகக் கிடைப்பது.
182. இதன் பயன்கள் யாவை?
உலைகளுக்குக் கரைகள் அமைக்கவும் உருகாக்கற்கள் செய்யவும் பயன்படுவது.
183. அலுமினிய வண்ணக் குழைவு என்றால் என்ன?
அலுமினிய நிறமியைப் பூசும் எண்ணெயில் கலந்து செய்யப்படும் பசை,
184. இதன் பயன் யாது?
கதிர்வீச்சை மறித்து வெப்பக் காற்றிலும் வெந்நீர்க் குழாயிலும் தொட்டியிலும் வெப்பத்தை நிலைநிறுத்துவது.
185. அலுமினியப் பசை என்றால் என்ன?
நன்கு நுணுக்கிய அலுமினியத் துளை எண்ணெயில் கலந்து செய்யப்படுவது. அலுமினிய வண்ணங்களில் பயன்படுவது.
186. அலுமினியச் சவர்க்காரம் என்றால் என்ன?
உயர் கார்பாக்சிலிகக் காடி அலுமினியம் ஆகியவற்றின் உப்பு. நீரில் கரையாது. எண்ணெயில் கரையும்.
187. இதன் பயன் யாது?
பூசும் எண்ணெய்களிலும் வண்ணங்களிலும் பயன்படுவது.
188. இழையுப்பு என்றால் என்ன?
இயற்கை அலுமினியம் சல்பேட்
189. சீனக் களிமண் என்பது யாது?
கேயோலின். இயற்கை அலுமினியம் சிலிகேட். வாய்வழி உட்கொள்ள நச்சுப்பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப்போக்கு, குடல்அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுவது.
190. அமெரிசியத்தின் பயன் யாது?
அமெரிசியம் 241 காமா கதிர்வரைவியலில் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், பயன்படுவது, என்ன, அலுமினியம், யாது, பயன், அலுமினிய, இதன், எண்ணெயில்