வேதியியல் :: உலோகம்
171. சோடியம் அய்டிராக்சைடின் பயன்கள் யாவை?
எரிசோடா. சாயங்கள், சவர்க்காரங்கள், மருந்துகள் முதலியவை செய்ய.
172. சோடியம் அய்போகுளோரைட்டின் பயன்கள் யாவை?
நிலைப்பிலாப் வெண்ணிறப்படிகம். நீர்க்கரைசலாக வைக்கப்பட்டுள்ளது. நச்சுத்தடை ஆக்சிஜன் ஏற்றி.
173. சோடியம் நைட்ரேட்டின் பயன்கள் யாவை?
வெடியுப்பு. வெண்ணிறக் கனசதுரப்படிகம். உரம். நைட்ரேட்டுகள் நைட்டிரிகக்காடி ஆகியவற்றிற்கு ஊற்று.
174. சோடியம் பர்பொரேட்டின் பயன்கள் யாவை?
கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். வெளுப்பி, தொற்றுநீக்கி.
175. சோடியம் பெராக்சைடின் பயன்கள் யாவை?
வெளிறிய மஞ்சள் நிறத் திண்மம். வெளுப்பி.
176. சோடியம் பைரோபொரேட்டின் பயன்கள் யாவை?
கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். நச்சுத்தடை. கண்ணாடி, பீங்கான் முதலியவை செய்ய.
177. சோடியம் சல்பேட்டின் பயன்கள் யாவை?
வெண்ணிறப்படிகம். கண்ணாடி, தாள் முதலியவை செய்ய.
178. சோடியம் சல்பைடின் பயன்கள் யாவை?
மஞ்சள் சிவப்பு நிறத்திண்மம். சாயங்கள் உண்டாக்கவும் தோலைப் பதப்படுத்தவும் பயன்படுவது.
179. சோடியம் சல்பைட்டின் பயன்கள் யாவை?
வெண்ணிறப் படிகம். உணவுப் பாதுகாப்புப் பொருள். ஒளிப்படத் தொழிலில் பயன்படுவது.
180. அலுமினியத்தின் பயன்கள் யாவை?
1. வானூர்தித் தொழில், தானியங்கி தொழிலிலும் முதன்மையாகப் பயன்படுவது.
2. ஒளிப்படப் பொருள்களையும் மருந்துப் பொருள் களையும் பொட்டலங்களாக அடைக்கப் பயன்படுவது.
3. செப்புக் கம்பிகளுக்குப் பதிலாகப் பயன்படுவது. இது ஒர் உலோகமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்கள், யாவை, சோடியம், பயன்படுவது, படிகம், முதலியவை, செய்ய, வெண்ணிறப்