வேதியியல் :: உலோகம்
161. எரிசோடா என்றால் என்ன?
சோடியம் அய்டிராக்சைடு.
162. படிகாரம் என்றால் என்ன?
இணைதிறன் மூன்றுள்ள அலுமினியக் குரோமியம், இணைதிறன் ஒன்றுள்ள பொட்டாசியம், சோடியம் முதலிய தனிமங்களின் இரட்டைச் சல்பேட்டு. எ-டு. பொட்டாஷ் படிகாரம்.
163. படிகாரத்தின் பயன்கள் யாவை?
சாயத் தொழிலில் நிறம் நிறுத்தி, தோலைப் பதனிடவும் நீரைத் துப்புரவு செய்யவும் பயன்படுவது.
164. வெடியுப்பின் வேதிப் பெயர் என்ன?
பொட்டாசியம் நைட்ரேட்
165. சோடாலைமின் பயன்கள் யாவை?
மாநிறத் திண்மம். உலர்த்தி, உறிஞ்சி. (CO2)
166. சோடியம் அலுமினேட்டின் பயன்கள் யாவை?
வெண்ணிறத் திண்மம். நிறம்நிறுத்தி, கண்ணாடி உற்பத்தியில் பயன்படுதல்.
167. சோடாமைடின் பயன்கள் யாவை?
மெழுகு போன்ற பொருள். காஸ்டனர் கெல்னர் முறையிலும் வெடிமருந்து செய்வதிலும் பயன்படுவது.
168. சோடியம் குளோரைடின் சாதாரணப் பெயர் என்ன?
உப்பு
169. இதன் பயன்கள் யாவை?
உணவின் இன்றியமையாப் பகுதிப் பொருள். எரிசோடா, குளோரின், சோடியம் கார்பனேட்டு முதலிய பொருள்கள் செய்யப் பயன்படுவது.
170. சோடியம் சைனைடின் பயன்கள் யாவை?
நிறமற்ற திண்மம். வெள்ளி, பொன் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கவும், செம்புமுலாம், பொன்முலாம், வெள்ளிமுலாம் பூசவும் பயன்படுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, பயன்கள், சோடியம், என்ன, திண்மம், பயன்படுவது