வேதியியல் :: உலோகம்
151. பாறையுப்பின் வேறு பெயர் என்ன?
இந்துப்பு. சோடியம் குளோரைடின் கனிம வடிவம், இயற்கையாகத் தோன்றுவது.
152. கிளாபர் உப்பு என்றால் என்ன?
மிரபிலைட் என்று பெயர் பெறுவது. நீரேறிய சோடியம் சல்பேட்டு. உப்பு ஏரிகளிலும் கடல்நீரிலும் காணப்படுவது.
153. சமையல் சோடா என்பது எது?
சோடியம் அய்டிரஜன் கார்பனேட்
154. அடிப்படை விசைகள் யாவை?
ஈர்ப்பு, காந்தம், மின்சாரம் முதலியவை.
155. சால்சோடா என்பது என்ன?
சலவைச் சோடா. சோடியம் கார்பனேட் டெக்கா ஹைடிரேட்
156. சோடாநீர் என்பது என்ன?
கரி இரு ஆக்சைடு அழுத்தத்தில் கரைந்த நீர். திறப்பதின் மூலம் அழுத்தத்தை நீக்க, வளியின் கரைதிறன் குறைவதால், நுரை வழிகிறது.
157. சோடியத்தின் பயன்கள் யாவை?
வெள்ளி போன்ற வெண்ணிற உலோகம். ஒடுக்கி, வினையூக்கி.
158. சோடியம் அலுமினியத்தின் பயன்கள் யாவை?
வெண்ணிறத் திண்மம். நிறம் நிறுத்தி. கண்ணாடி உற்பத்தியில் பயன்படுவது.
159. எரிகாரம் என்றால் என்ன?
சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு.
160. எரிபொட்டாஷ் என்றால் என்ன?
பொட்டாசிய அய்டிராக்சைடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, சோடியம், யாவை, என்றால், என்பது