வேதியியல் :: உலோகம்
141. ரூத்தினியத்தின் பயன் யாது?
பிளாட்டினத் தொகுதியைச் சேர்ந்த உலோகம். மின் தொடர்புகளிலும் அணிகலன்களிலும் பயன்படுவது. வளிகளை உறிஞ்சும் வீறுள்ள வினையூக்கி.
142. டெக்டினிடியம் என்பதின் பண்புகள் யாவை?
மாறுநிலைத் தனிமம். அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது.
143. டெல்லூரியத்தின் சிறப்பென்ன?
நொறுங்கக்கூடிய உலோகப் போலி. கறுக்கா எஃகிலும் பிற உலோகங்களிலும் பயன்படுவது.
144. டெர்பியத்தின் சிறப்பென்ன?
மென்மையான வெள்ளிநிறத்தனிமம். இலாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ள திண்ம நிலைக் கருவிகளில் மாசுப் பொருளாகப் பயன்படுவது.
145. ஆக்டினியம் என்றால் என்ன?
நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம். ஆல்பா துகள்களின் ஊற்றுவாய்.
146. கடற்பஞ்சு நிக்கலின் பயன் யாது?
இது சோடியம்.அய்டிராக்சைடு சேர்ந்த நிக்கல். வினையூக்கி.
147. ஈயச் செந்தூரத்தின் பயன்கள் யாவை?
ஒளிர்வான மாநிறத்தாள். கண்ணாடி தொழிலில் நிறமி. ஆக்சிஜன் ஏற்றி. .
148. ரேடியத்தின் பயன் யாது?
வெண்ணிற உலோகம். பிளாட்டினத்துடன் சேர்ந்து உலோகக் கலவையாகப் பயன்படுவது. அறிவியல்கருவிகள் செய்யப் பயன்படுவது.
149. மேசையுப்பு என்பது யாது?
சோடியம் குளோரைடு.
150. பாறைப்படிகம் என்பது என்ன?
சிலிகாவின் தூய இயற்கைப் படிக வடிவம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, யாது, பயன்