வேதியியல் :: உலோகம்
111. காலமைன் என்றால் என்ன?
துத்தநாகக் கனிமம். தோல்மருந்துகள் செய்யப் பயன்படுவது.
112. நொபிலியத்தின் பயன் யாது?
கதிரியக்க உலோகம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல சேர்மங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.
113. இதை இனங்கண்டறிந்தவர் யாவர்?
ஜிராசோ, சீபாக் ஆகிய இருவரும் 1966இல் இதை இனங்கண்டனர்.
114. மாலிப்டினத்தின் பயன்கள் யாவை? கடின வெண்ணிற உலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் மின்விளக்கு இழைகள் செய்யவும் பயன்படுவது.
115. மினியம் என்றால் என்ன? பயன் யாது?
சிவப்புக் காரீய (IV) ஆக்சைடு, கண்ணாடி செய்வதிலும் வண்ணநிறமி உண்டாக்குவதிலும் பயன்படுவது. அரிமானத்தைத் தடுப்பது.
116. நியோடைமியம் என்றால் என்ன?
வெள்ளி போன்ற உலோகம். மிஷ் உலோகக் கலவையில் பயன்படுவது.
117. நெப்டூனியம் எப்பொழுது தொகுக்கப்பட்டது?
1940இல் தொகுக்கப்பட்டது.
118. தகடாக்கல் என்றால் என்ன?
உலோகத்தைத் தகடுகளாக அடித்தல். உலோகப் பண்புகளில் ஒன்று. கம்பியாக்கலும் இதுபோன்ற ஒரு பண்பே.
119. கொபால்ட்டின் பயன்கள் யாவை?
உலோகக் கலவைகள் செய்யவும் மின்முலாம் பூசவும் வெட்டுங்கருவிகளிலும் பயன்படுவது.
120. சோடியம் தயோ சல்பேட்டின் பயன் யாது?
வெண்ணிறத்திண்மம் ஒளிப்படத் தொழிலில் நிறம் நிறுத்தி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, என்றால், என்ன, செய்யவும், உலோகக், பயன், யாது, உலோகம்