வேதியியல் :: உலோகம்
101. சாக்கட்டி என்றால் என்ன?
சுண்ணாம்புக்கட்டி கால்சியம் கார்பனேட்டு.
102. இரசகற்பூரத்தின் பயன் யாது?
பூஞ்சைக்கொல்லி.
103. சூடத்தின் பயன் யாது?
ஒர் ஊக்கி. வயிற்று உப்புசம் நீக்கவும் செல்லுலாய்டு செய்யவும் பயன்படுவது.
104. லித்தியம் என்பது யாது?
வலுக்குறைந்த வெண்ணிறக் காரஉலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் அணு வெப்ப ஆற்றலை உண்டாக்கவும் பயன்படுவது.
105. லித்தியம் குளோரைடின் பயன்கள் யாவை?
வெண்ணிறத்திண்மம். காற்று மட்டாக்கிகளிலும் காற்றின் ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்தவும் பயன்படுவது.
106. லித்தியம் புளோரைடின் பயன்கள் யாவை?
அரிதாகக் கரையும் உப்பு. மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் காடித்தடைப் பூச்சாகவும் பயன்படுவது.
107. லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டின் பயன் யாது?
கரைசலாகவே அறியப்படும் சேர்மம். முடக்குவாதம் நீக்கும் மருந்துகளில் பயன்படுவது.
108. கேட்மியத்தின் சிறப்பு யாது?
வெண்ணிற உலோகம். அல்லணுக்களை உறிஞ்சுவது. அணு உலைகளில் கட்டுப்பாட்டுக் கோல்கள்.
109. சீசியத்தின் சிறப்பு யாது?
இந்த மென்மையான உலோகம் வானொலிக் குழாய்களிலும், ஒளிமின்கலமும் செய்யப் பயன்படுவது.
110. சீசியக் கடிகாரம் என்றால் என்ன?
ஆற்றல் வேறுபாட்டு அடிப்படையில் வேலை செய்யும் அணுக்கடிகாரம். இதில் சீசியம் 133 பயன்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, யாது, லித்தியம், பயன்