வேதியியல் :: உலோகம்
91. நீரழுத்தச் சுண்ணாம்பு என்றால் என்ன?
சூடாக்கிய சுண்ணாம்புக்கல்லைப் பொடியாக்க, அது பருக்காமல் நீரை உறிஞ்சி சிமெண்டைக் கொடுக்கும்.
92. சுண்ணாம்புக் கல்லின் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் ஆக்சைடு.
93. பூச்சுச்சுண்ணாம்பு என்றால் என்ன?
சுட்ட சுண்ணாம்பை நீரில் கரைத்துப் பெறுவது. வெள்ளையடிக்கப் பயன்படுவது.
94. சுண்ணாம்புநீர் என்றால் என்ன?
நீரில் கால்சியம் அய்டிராக்சைடு சேர்ந்த கரைசல்.
95. சுண்ணாம்பு சேர்த்தல் என்றால் என்ன?
கடினத் தன்மையை நீக்க மண்ணிற்குச் சுண்ணாம்பு (கால்சியம் அய்டிராக்சைடு) சேர்த்தல்.
96. சுதையமாக்கல் (கால்சினேஷன்) என்றால் என்ன?
தாதுவை வெப்பப்படுத்தி அதிலிருந்து ஆக்சைடைப் பெறுதல்.
97. கால்சியம் கார்பைடின் சிறப்பு யாது?
இது ஒர் உரம்.
98. கால்சியம் சயனைடின் சிறப்பு யாது?
இதிலிருந்து யூரியா உரம் கிடைக்கிறது.
99. கால்சியம் அய்டிராக்சைடின் சிறப்பு யாது?
இது சிமெண்டு தொழிலில் பயன்படுவது.
100. கால்சியம் ஆக்சைடின் சிறப்பு யாது?
இது சுட்ட சுண்ணாம்பு. சிமெண்ட் செய்யப் பயன்படுவது. -
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கால்சியம், என்ன, என்றால், யாது, சிறப்பு, சுண்ணாம்பு, பயன்படுவது