வேதியியல் :: பல் வகை
11. ரேடியத்தை கண்டறிந்தவர் யாவர்?
குயூரி தம்பதிகள், 1898.
12. கதிரியக்கம் என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?
மேரி குயூரி, 1898.
13. மேரி குயூரி பிரித்தறிந்த உலோகம் எது?
பொலோனியம், 1898.
14. ஹென்றி மோஸ்லி ஆய்வுகள் உறுதி செய்தது என்ன?
தனிம வரிசை அட்டவணையில் ஒர் ஒழுங்குள்ளது, 1913.
15. ஆஃபினியத் தனிமத்தைக் கண்டறிந்தவர் யாவர்?
டிர்க் காஸ்டர், ஜியார்கி ஹெவிசே, 1923.
16. செயற்கை உலோகங்கள் யாவை?
இவை நாடா போன்ற பலபடிச்சேர்மங்கள். ஆய்வு நிலையில் உள்ளவை. எதிர் காலத்தில் உலோகங்களையும் அரைகுறைக்கடத்திகளையும் மின்னணுக் கருவிகளில் மாற்றிடு செய்ய வல்லவை (1994).
17. மூலக்கூறு உலோகக் கலவைகள் என்றால் என்ன?
கரிம மூலக்கூறுகளிலிருந்து பெறப்படுபவை. நிலை வெப்பக்கருவி ஒன்று இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
18. கூடுகை வேதியியல் என்றால் என்ன?
இது ஒரு நுணுக்கம். மூலக்கூறுகள் வரம்பற்றுச் சேர்வதை அனுமதிப்பது. இதனோடு தொடர்புடையவை கூடுகை முறையும் கூடுகை துணுக்கமும் ஆகும்.
19. நுண்ணலை வேதியியல் என்றால் என்ன?
நுண்ணலைகள் பற்றி ஆராயும் துறை.
20. மீமூலக்கூறு வேதியியல் என்றால் என்ன?
முழு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள விசைகளை ஆராயும் துறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல் வகை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், வேதியியல், கூடுகை, குயூரி