வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்

81. கூட்டுவினை என்றால் என்ன?
எத்திலீன், அசெட்டலீன் ஆகியவை புரோமின் கரைசலுடன் வினையாற்றி, அக்கரைசலை நிறமற்றதாக்கும் வினை.
82. கன்னிசாரோ வினை என்றால் என்ன?
பென்சால் - டி - கைடை ஒரு கார அடர்கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும்பாழுது பென்சைல் ஆல்ககாலாகவும் பென்சாயிகக் காடியாகவும் அது மாறும்.
83. பையூரெட் ஆய்வு என்பது என்ன?
இது புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட்டு துளித்துளியாகச் சேர்க்கப்படுகிறது. இப்பொழுது தோன்றும் ஊதாநிறம் புரதம் இருப்பதைக் காட்டுகிறது.
(2) வேதி விதிகள்
84. போல்ட்ஸ்மன் மாறிலி என்றால் என்ன?
ஆவோ கடரோ மாறிலிக்கும் அனைத்து வளி மாறிலிக்குமுள்ள வீதம்.
85. ஆவோகடரோ மாறிலி என்றால் என்ன?
ஒரு மோல் பொருளிலுள்ள அணுக்களின் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை இதன் மதிப்பு 6.02252 × 1023 இதன் பழைய பெயர் ஆவோகடரோ எண்.
86. ஆவோகடரோ கருதுகோள் என்றால் என்ன?
ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் உள்ள பல வளிகளின் பருமன் சமமானால், அவற்றிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது. இதை இவர் 1811 இல் முன்மொழிந்தார்.
87. டியுலாங்-பெட்டிட் விதி யாது?
இதன் சிறப்பு யாது? திண்மநிலையில் இருக்கும் ஒரு தனிமத்தின் வெப்ப எண், அதன் அணு எடை ஆகியவற்றின் பெருக்குத்தொகை மாறா எண்.
அணு எடைx வெப்ப எண் = 2.68x104.
அணு எடை 20க்கு மேற்பட்ட பல உலோகங்கள் இவ்விதிக்குக் கட்டுப்படுபவை. கரி, பொரான், சிலிகான் முதலிய உலோகங்கள் இவ்விதிக்கு உட்படுவதில்லை.
88. வேதிக்கூடுகை விதிகள் யாவை?
1. பொருண்மை அழியா விதி - வேதிமாற்றம் நிகழும்பொழுது உருவாகும் வினைப் பொருள்களின் மொத்த பொருண்மை வேதிமாற்றத்தில் ஈடுபட்ட வினைப்படுபொருள்களின் மொத்தப் பொருண்மைக்கு ஈடாகும். 1789இல் இவ்விதியை இலாவசியர் வெளியிட்டார்.
2. மாறாவீத விதி - ஒரு சேர்மத்தை எம்முறையில் உண்டாக்கினாலும், அதில் ஒரே வகையான தனிமங்கள் ஒரு திட்டமான எடைவீதத்திலேயே கூடியிருக்கும் 1799இல் பிரெளஸ்ட் இவ்விதியைக் கண்டறிந்தார்.
3. மடங்குவீத விதி - இரு தனிமங்கள் இணைந்து, ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களைக் கொடுக்கும்போது குறிப்பிட்ட எடையுள்ள ஒரு தனிமத்துடன் சேரும் மற்றொரு தனிமத்துடன் எடைகள் சிறிய முழு எண் வீதத்தில் இருக்கும். 1803இல் இதை ஜான் டால்டன் வரையறை செய்தார்.
89. பாபோ விதி யாது?
ஒரு கரைபொருளை நீர்மத்தில் கரைக்க, அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்துள்ள கரைபொருள் அளவுக்கு நேர்வீதத்தில் இருக்கும்.
90. இவ்விதி எப்பொழுது வகுக்கப்பட்டது?
ஜெர்மன் வேதிஇயலார் பாபோ என்பவரால் 1847இல் வகுக்கப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், விதி, இருக்கும், யாது, இதன், ஆவோகடரோ