வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்

71. இந்த அமிலத்தின் பயன்கள் யாவை?
அரசநீர்மம் தயாரிக்க, குளோரின் தயாரிக்க.
72. நெசலர் கரைசல் என்றால் என்ன?
ஜூலியஸ் நெசலர் என்பவர் பெயரால் அமைந்தது. அம்மோனியாவைக் கண்டறியப் பயன்படுவது. இவ்வளியுடன் இக்கரைசலைச் சேர்க்க மாநிற வீழ்படிவு
73. இக்கரைசலை எவ்வாறு பெறலாம்?
பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசலில் பொட்டாசியம் மெர்க்குரிக் அயோடைடைச் சேர்த்துப் பெறலாம்.
74. வினையூக்கி என்றால் என்ன?
தான் மாறுபடாமல் தன்னுடன் சேருகின்ற பொருளை மாறுபாடு அடையச் செய்யும் வேதிப் பொருள். இது வேதிவினையை விரைவுப் படுத்துவது.
75. வினையூக்கியின் வகைகள் யாவை?
1. கனிம வினையூக்கி - மாங்கனிஸ் - இரு - ஆக்சைடு
2. கரிம வினையூக்கி - நொதிகள்.
76. வினையூக்கம் என்றால் என்ன?
வினையூக்கியால் ஏற்படும் வேதிச்செயல்.
77. ஆல்டால் வினை என்றால் என்ன?
இதில் ஒர் ஆல்டிகைடின் இரு மூலக்கூறுகள் எரிசோடா முன்னிலையில் சேர்ந்து ஒர் ஆல்டாலைக் கொடுக்கும்.
78. வெண்ணாவி என்றால் என்ன?
ஆல்கேன் கலவை. கரைப்பான். வண்ணத்தொழிலில் பயன்படுவது.
79. டையசோவாக்குதல் என்றால் என்ன?
நறுமண அமைன் (அனிலைன்) குறைந்த வெப்பநிலையில் நைட்டிரசக் காடியோடு வினையாற்றுதல்.
80. கரிமப்படுவினை என்றால் என்ன?
இவ்வினையில் கரிம வேதிப்பொருளில் நைட்ரோ தொகுதி சேர்க்கப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வினையூக்கி