வேதியியல் :: அடிப்படைகள்
41. அலகுச் செயல்முறைகள் யாவை?
வேதிமுறைகளில் நன்கு அறியப்பட்ட படி நிலைகளாவன: 1. காய்ச்சி வடித்தல். 2. உப்பீனி ஏற்றம். 3. ஆல்கைலாதல் 4. நைட்ரோ ஏற்றம். 5. வெந்தழல் சிதைவு. 6. தொழிற்சாலை முறையாக்கல். 7. வடிவமைப்பிற்குரிய பயன்பாடு.
42. கருவிவயமாக்கல் என்றால் என்ன?
ஒரு வேதிநிலையத்தினுள் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தலும் நிலைமைகளை அளத்தலும் ஆகும்.
43. இச்செயலிலுள்ள மூவகைக் கருவிகள் யாவை?
1. நடப்புச் செய்திக்குரிய கருவிகள். பாதரச வெப்பநிலை மானி, எடைமானி, அழுத்த அளவிகள்.
2. பாகியல் பதிவுக் கருவிகள். பாய்ம ஒட்டம், அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றை அளப்பவை.
3. நிலைமைகளைக் கட்டுப்படுத்துங் கருவிகள். பருப் பொருள் ஒட்டம், பி.எச். முதலிய நிலைமைகளைக் கட்டுப்படுத்துங் கருவிகள்.
44. தாங்குகரைசல் என்றால் என்ன?
வீறுள்ள காடியையோ படிக மூலியையோ சேர்த்தாலும் பிச் மதிப்பு மாறாத கரைசல். எ-டு. அம்மோனியம் அய்டிராக்சைடு, அம்மோனியம் குளோரைடு.
45. இக்கரைசலின் பயன்கள் யாவை?
1. பிச் மதிப்பை நிலை நிறுத்தும் ஊசி மருந்துகள் செய்ய.
2. தோல் பதனிடும் தொழிலில் பயன்படுதல்.
3. உயிரிகளில் தங்கிப் பிஎச் மதிப்பில் ஏற்படும் திடில் மாற்றங்களுக்கு எதிராகப் பாதுகாப்பளிப்பது.
46. பெல்லிங் கரைசல் என்றால் என்ன?
ஆல்டிகைடு (-CHO) தொகுதியைக் கண்டறிப் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிப்படைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கருவிகள், என்ன, என்றால், யாவை