வேதியியல் :: அடிப்படைகள்
11. சைன் என்பது என்ன?
இது ஒரு நிலை எண். குறிப்பிட்ட கோணத்தின் எதிர்ப்புயத்திற்கும் கர்ணத்திற்கும் உள்ள வீதம். 1 - 90 பாகைகளுக்குச் சைன்களை அட்டவணையிலிருந்து அறியலாம்.
12. பிஎச் என்பது என்ன?
ஒரு கரைசலிலுள்ள அய்டிரஜன் அயனிச்செறிவின் பத்தடிமானமுள்ள எதிர் மடக்கை (PH = log 10H+)
13. இதன் தன்மை யாது?
ஒர் ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித் தன்மையையோ காட்டுவது. பிச்7க்குக் கீழிருந்தால் அது காடித் தன்மை.7க்கு மேலிருந்தால் அது காரத் தன்மை.
14. பி.எச். மதிப்பு என்றால் என்ன?
ஒரு கரைசலின் காடித் தன்மையை அளக்கப் பயன்படுவது. நீரின் பி.எச். 7.
15. பிஎச் மதிப்பை எவ்வாறு காணலாம்?
இம் மதிப்பைத் தோராயமாக நிலைகாட்டிகளைக் கொண்டு பெறலாம். மின்வாய் தொகுதிகளைப் பயன்படுத்திப் துல்லியமாகக் காணலாம்.
16. பிஎச் மானி என்பது என்ன?
ஒரு கரைசல் அல்லது ஊடகத்தின் பிஎச்சைக் கண்டறியப் பயன்படுவது.
17. பிகே (pK) என்பது யாது?
பத்தின் அடிமானமுள்ள காடியின் பிரிகை மாறியின் எதிர் மடக்கை, pK = log101/K.
18. பிகே மதிப்பு என்றால் என்ன?
மடக்கை வேறுபட்ட காடிகளின் வலுக்களை ஒப்பிடப் பயன்படுவது.
19. பிடிப்பு என்றால் என்ன?
ஒரு துகளை மற்றொரு துகள் கவரல், எ-டு. நேர் அயனி மின்னணுவைக் கவர்ந்து அல்லணுவை உண்டாக்குதல்.
20. வடிவமைப்பு (சிஸ்) என்றால் என்ன?
இதில் ஒத்த தொகுதிகளில் ஒன்று மற்றொன்றுக்கருகில் இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிப்படைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், என்பது, பயன்படுவது, காடித், மடக்கை, பிஎச், தன்மை