தாவரவியல் :: வகைப்பாட்டியல்
21. நிலைகாட்டும் சிறப்பினம் என்றால் என்ன?
சுட்டும் சிறப்பினம். ஒரிடத்திலுள்ள சூழ்நிலைகளை அளக்கப் பயன்படும் உயிரி. பூப்பாசிகள் மாசுபடும் அளவையும் டியூபிபெக்ஸ் புழுக்கள் குறைந்த அளவு உயிர்வளியையும் காட்டுபவை.
22. அயல்வகை (அலோடைப்) என்றால் என்ன?
பால்தன்மையில் ஒத்த வகைக்கு எதிரான துணைவகை.
23. வகைமாதிரி என்றால் என்ன?
சிறப்பினம் அல்லது துணைச்சிறப்பினத்தை விளக்கவும் பெயரிடவும் உதவும் போலிகை.
24. வகைப்பாட்டியலின் அலகுகள் யாவை?
1. உலகம்
2. பெரும்பிரிவு.
3. வகுப்பு.
4. வரிசை.
5. குடும்பம்.
6. பேரிளம்.
7. சிறப்பினம்.
25. இந்த அலகுகளில் அடிப்படையானது எது?
சிறப்பினமே.
26. வகுப்பு என்றால் என்ன?
வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. ஒத்த பல வரிசைகளைக் கொண்டது. எ-டு. இரு விதையிலைத் தாவரங்கள்.
27. குடும்பம் என்றால் என்ன?
உயிரிச் சமூகத்தின் வகையலகு. பேரினத்திற்கும் வரிசைக்கும் நடுவிலுள்ளது. எ.டு. மால்வேசி.
28. பூப்பனவற்றின் வகைகள் யாவை?
1. உறையில் விதையுள்ளவை - பூவரசு.
2. உறையில் விதையில்லாதவை. சளம்பனை.
3. இரு விதையிலைத் தாவரங்கள் - பூவரசு.
4. ஒரு விதையிலைத் தாவரங்கள் - தென்னை.
29. பூவாதனவற்றின் வகைகள் யாவை?
1. தண்டுடையன - பாசிகள், பூஞ்சைகள்.
2. மாசித் தாவரங்கள் - மாசிகள்.
3. பெரணித் தாவரங்கள் - பெரணிகள்.
30. பூக்குந் தாவரங்கள் யாவை?
தாவர உலகின் பெரும்பிரிவு. இதில் உறையில் விதையுள்ள தாவரங்கள் (மா) உறையில் விதையில்லாத் தாவரங்கள் அடங்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகைப்பாட்டியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தாவரங்கள், என்ன, என்றால், உறையில், யாவை, சிறப்பினம், விதையிலைத்