தாவரவியல் :: வகைப்பாட்டியல்
1. வகைப்பாடு என்றால் என்ன?
உறுப்பு முதலிய பண்புகளைக் கொண்டு உயிரிகளைப் பலதொகுதிகளாகவும் அவற்றிற்குட்பட்ட பிரிவுகளாகவும் பகுத்தல்.
2. வகைப்பாட்டியல் என்றால் என்ன?
வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறை களையும் ஆராயுந்துறை.
3. இதன் தந்தை யார்?
ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் (1707-1778) ஆவார்.
4. இதன் இரு வகைகள் யாவை?
1. தாவர வகைப்பாட்டியல். 2. விலங்கு வகைப்பாட்டியல்
5. வகைப்பாட்டில் கருத்தில் கொள்ளப்படுபவை யாவை?
ஒர் உயிரியின உறுப்பமைவு, வேலை, வளர்ச்சி முதலிய வற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் கருத்தில் கொள் ளப்படுகின்றன.
6. இயற்கை வகைப்பாடு என்றால் என்ன?
ஏற்றுக் கொள்ளப்பட்ட வகைப்பாடு. தாவர உலகைச் சார்ந்தது. புவி இயல், உருவியல், தாவர வேதியியல், நுண்உயிரியல், உயிரணு மரபியல் முதலிய துறைகளில் செய்த ஆய்வுகள் அடிப்படையில் வகுத்த வகைப்பாடு. எ-டு பெந்தம்-ஹlக்கர் முறை.
7. லின்னே முறை என்றால் என்ன?
ஒர் உயிருக்கு இரு பெயர் இடும் முறை.எ-டு. அய்பிஸ்கஸ் ரோசாசினன்சிஸ்.
8. லின்னே வகைப்பாட்டில் எத்தனை வகுப்புகள் உள்ளன?
24 வகுப்புகள் உள்ளன. இது செயற்கை வகைப்பாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
9. இயற்கை முறை வகைப்பாடுகளை வகுத்தவர்கள் யார்?
பெந்தம்-ஹீக்கர், ஈங்ளர், பெசே ஹச்சின்சன், மற்றும் திப்பு. பெந்தம்-ஹீக்கர் இங்கிலாந்திலும், ஈங்களர் முறை ஐரோப்பா அமெரிக்கக் கிழக்குப் பகுதியிலும், பெசே முறை அமெரிக்காவின் வடக்கு மையப்பகுதிகளிலும் பயன்படுபவை. இவற்றில் ஒன்றும் நிறைவானது அன்று.
10. இரு பெயரிடல் என்றால் என்ன?
உயிரிகளுக்கு இரு பெயரிட்டு அழைக்கும் முறை. ஒவ்வொரு உயிருக்கும் இருபெயர்கள் உண்டு. ஒன்று பேரினப் பெயர். மற்றொன்று சிறப்பினப்பெயர். எ-டு அய்யிஸ்கஸ் ரோசாசினன்சிஸ் (செம்பருத்தி) என்று பெயர். இதில் முன்னது பேரினப்பெயர். பின்னது சிறப்பினப் பெயர்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகைப்பாட்டியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - முறை, என்ன, என்றால், வகைப்பாடு, பெயர், பெந்தம், வகைப்பாட்டியல், முதலிய, இயற்கை, தாவர