தாவரவியல் :: வேளாண் அறிஞர் சுவாமிநாதன்
21. 1994இல் தாம் பரிசு பெற்ற பொழுது ஆற்றிய ஏற்புரையில் அவர் கூறியவை யாவை?
உலக உணவுப் பாதுகாப்பு முறை இடரில் உள்ளது. இதற்குச் சூழ்நிலையும் சமூகமே காரணங்கள் ஆகும். இந்த அச்சுறுத்தலை நெடிய அரசியல் பார்வையாலும் சீரிய மக்கள் செயல்திட்டத்தின் மூலமுமே போக்க இயலும்.
22. எதற்காக அவருக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது? அளித்தது யார்?
உலக உணவு-வேளாண் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜேக்குயிஸ் டயஃப். இவர் 29-4 -1999 அன்று சென்னையில் இப்பரிசை அளித்தார். வேளாண்மையில் மகளிர் பங்கு குறித்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இப்பதக்கம் வழங்கப்பட்டது.
23. 2001இல் லோகமானிய திலக் விருது பெற்ற போது அவர் கூறியவை யாவை?
ஒரு புதிய இந்தியாவின் நான்கு தூண்களைத் திலக் உருவாக்கினார். அவையாவன: அயல்நாட்டுப் பொருள் புறக்கணிப்பு, சுதேசி, தேசியக்கல்வி, சுயராஜ்யம்.
24. தமிழ்நாட்டில் சமுதாய உணவு வங்கிகள் மையம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
2-10-2001 இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
25. இம்மையத்தின் தேவைகள் யாவை?
1. சூழ்நிலை இயல்.
2. ஒழுக்கவியல்.
3. நெருக்கடிகள்.
4. உரிமைகள்.
26. சமூக நீதியுள்ள உலகை எவ்வாறு உருவாக்கலாம் என்று அவர் கூறுகிறார்?
கதிரவன் ஆற்றல், மரபாக்கம், தகவல் தொழில்நுட்ப இயல் ஆகிய மூன்றும் இந்த உலகை உருவாக்கும். தொழில் நுட்ப இழுப்புக்கு ஏற்ப ஒழுக்கத் தள்ளலை அளிக்க வேண்டும்.
27. நேரிய உணவு உற்பத்திக்குரிய நான்கு புலங்கள் யாவை என்று அவர் கூறுகின்றார்?
1. உயிரியல் உற்பத்தித்திறனை உயர்த்துதல்.
2. உயிரியல் வேற்றுமையைப் பாதுகாத்தல்.
3. உயிரியல் இறக்கக்குறைவான பொருள் அதிகரிப்பு.
4. கதிர்வீச்சுப் பண்டுவம், தட்பவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி.
28. அறிவியல், தொழில்நுட்ப இயல் ஆகிய இரண்டையும் பற்றி அவர் கூறுவது என்ன?
"ஏழ்மையே, பசியே, அறியாமையே போங்கள். நீங்கள் போங்கள்" என்று கூறுவதற்கு அறிவியலும் தொழில் நுட்பமும் மந்திரக்கோல்கள் அல்ல. அவை மந்திரக் கோல்களான கருவிகளையே வழங்கும். அவற்றைக் கொண்டே நாம் நம் சமுதாய இலக்குகளை அடைய வேண்டும்.
29. ஒரு நாடு நல்லது கெட்டது என்று கூறுவதற்குரிய 11 காரணித் தொகுதிகள் யாவை?
இவை வேளாண்அறிஞர் டாக்டர் சுவாமிநாதன் கூறுவதாகும்.
1. ஊட்டப் பாதுகாப்பு.
2. நீர்ப்பாதுகாப்பு.
3. எழுத்தறிவும் தொழில் நுட்ப மேலாண்மையும்.
4. உடல்நலப் பாதுகாப்பு.
5. உறைவிடம்.
6. சூழ்நிலைப் பாதுகாப்பு.
7. வாழ்க்கைநிலைப் பாதுகாப்பு.
8. அறிவார்ந்த தேசிய மற்றும் அயல்நாட்டு முதலீடு.
9. ஆற்றல் பாதுகாப்பு.
10. பால் சமத்துவம்; ஆண் பெண் இருவரும் சமமே.
11. பண்பாட்டு மரபு. (The Hindu, 2-12-2001)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேளாண் அறிஞர் சுவாமிநாதன் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர், பாதுகாப்பு, யாவை, உயிரியல், தொழில், உணவு, இயல்