தாவரவியல் :: வேளாண் அறிஞர் சுவாமிநாதன்
1. சுவாமிநாதனின் முழுப் பெயர் என்ன?
மன்கோம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்.
2. சுவாமிநாதன் எங்கு எப்பொழுது பிறந்தார்?
கும்பகோணத்தில் 1925 ஆகஸ்ட் 7 இல் பிறந்தார்.
3. தொடக்கக் கல்வியை எங்குக் கற்றார்?
தமிழ்நாட்டில் கற்றார்.
4. எப்பொழுது முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்?
1952இல் கேம்பிரிட்ஜ் வேளாண் பள்ளியில் பட்டம் பெற்றார்.
5. அவர்தம் 20 ஆண்டுக்கால ஆராய்ச்சியை எங்குச் செய்தார்?
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் செய்தார்.
6. அவர்தம் அருஞ்செயல்கள் யாவை?
1. அதிக விளைச்சல்தரும் பல கோதுமை வகைகளை உருவாக்கினார். உருளைக்கிழங்கிலும் சணல் வகைகளிலும் செய்வதற்குக் கடினமான கலப்பினங்களைச் செய்தார்.
2. சிறந்த நிர்வாகி; சமூகத் தொண்டர்.
3. அவர் உருவாக்கிய பல திட்டங்களின் பயன்களை உழவர்கள் தங்கள் வயல்களில் நுகர்கின்றார்கள்.
4. வேளாண் உற்பத்தியை உயர்த்தப் பல முறைகளையும் நுட்பங்களையும் வகுத்துள்ளார்.
7. அவர் உணர்ந்தது என்ன?
நோபல் பரிசு பெற்ற என். இ. போர்லக் என்பார் ஒரு புதிய மெக்சிகக்குள்ள வகைக் கோதுமையை உருவாக்கினார். இது கோதுமைச் சிக்கலைத் தீர்க்கும் என்று உணர்ந்தார்.
8. அவர் பெற்ற விருதுகள் யாவை?
1. 1971இல் ரேமன் மேக்சேசே விருது பெற்றார். நாட்டில் வேளாண்மையில் ஒரு புது நம்பிக்கையை உருவாக்கிய தற்காக இந்தப் பரிசு.
2. 1973இல் இலண்டன் அரசர் கழக உறுப்பினரானார்.
3. பத்நகர் விருது, பிர்பால் சாகினி பதக்கம், மெண்டல் நினைவுப் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
4. 1987இல் முதல் உலக உணவுப் பரிசு பெறுதல்.
5. 1994இல் சசகாவா சூழ்நிலைப் பரிசு (UNEP) பெற்றார்.
6. 1996இல் நீலக்கோள் பரிசு பெற்றார்.
7. 1999 இந்திரா காந்தி அமைதிப் பரிசினைப் பெற்றார்.
8. 1999இல் உணவு - வேளாண்கழகப் பரிசு பெறல்.
9. 2001இல் புத்தாயிரம் விருதை இந்திய அறிவியல் பேரவையின் 88ஆவது அமர்வில் பெற்றார்.
10. 2001இல் லோகமானிய திலக் விருது பெறுதல்.
9. அவர் வகித்த பதவிகள் யாவை?
1. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்.
2. பிலிப்பைன்சிலுள்ள அனைத்துலக நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்.
10. அவர் பெற்ற தனிச் சிறப்பு யாது?
1986இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உலக அறிவியல் விருது பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் வேளாண் அறிவியலார் இவரே ஆவார்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேளாண் அறிஞர் சுவாமிநாதன் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பெற்றார், பரிசு, அவர், வேளாண், விருது, பெற்ற, ஆராய்ச்சி, செய்தார், இந்திய, யாவை