தாவரவியல் :: மண்ணியல்
21. மண்காரணிகள் என்பவை யாவை?
நீரடக்கம், பிஎச், கரிமப்பொருள், மண்நயம்.
22. இவற்றின் சிறப்பென்ன?
இவை ஒருவாழிடத்தில் இன்றியமையாத இயைபுறுப்பாக அமைபவை. தாவரப்பரவலில் அதிக செல்வாக்கு உள்ளவை.
23. மாற்றுப்பயிரிடல் (பயிர்ச்சுழற்சி) என்றால் என்ன?
களைத்த நிலத்திற்கும் ஊட்டமளிக்க ஒரு பருவத்தில் ஒரு பயிரும் (கடலை) அடுத்த பருவத்தில் வேறு ஒரு பயிரும். (பயிறு) சாகுபடி செய்யப்படுகின்றன. அல்லது ஒரு பருவத்தில் குறுவையும் மற்றொரு பருவத்தில் சம்பாவும் பயிரிடப்படுகின்றன.
24. நாற்றுநோய் என்றால் என்ன?
மண்ணிலுள்ள பூஞ்சையினால் நாற்றுகளுக்கு உண்டாகும் நோய்.
25. கரிப்பூட்டைநோய் என்றால் என்ன?
ஒட்டுண்ணிப் பூஞ்சைகளால் ஏற்படுவது. நெற்பயிரின் மணிகளுக்குப் பதிலாகக் கரிய சிதல்களை உண்டாக்கும்.
26. வேளாண்மை என்றால் என்ன?
மனிதன் ஈடுபடும் பல்வேறுபட்ட பொருளாதாரச் செயல்களில் ஒன்று. அது மனிதன் தன் வாழ்க்கை நடைபெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒர் இன்றியமையாத தொழில்.
27. வேளாண்மையின் இன்றியமையாமை என்ன?
1. முதன்மையான உணவுப் பொருள்களை அளிப்பது. அரிசி, கோதுமை.
2. நார்ப்பொருள்களையும் தொழிற்சாலை மூலப் பொருள்களையும் அதிகம் அளிப்பது.
3. பண்ணைமுறை என்பது வேளாண்மையில் ஒரு புதிய முறை.
28. எரு என்றால் என்ன?
உழுநிலத்தை வளப்படுத்தச் சேர்க்கும் ஊட்டப்பொருள். சாணம், தழை முதலியவை இயற்கை ஊட்டப்பொருள்கள்.
29. தொழுஉரம் என்றால் என்ன?
குச்சிவடிவ உயிர்வினையால் தாவரப் பொருள் சிதைதல். இதனால் செழிப்பான மண் தாவரத்திற்குக் கிடைக்கும்.
30. மட்கு என்றால் என்ன?
குப்பைசுடிளங்கள் இலைதழைகள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாதல். நல்ல எரு.
31. அசொட்டோபேக்டர் என்றால் என்ன?
இவை நைட்ரஜனை நிலைநிறுத்தும் குச்சிவடிவ உயிரிகள். வேளாண்மையிலும் தோட்டக்கலையிலும் சிறப்புள்ளவை. எ-டு. நைட்ரசமோனாஸ் என்னும் குச்சிவடிவ உயிரி அம்மோனியாவை நைட்ரேட்டு என்னும் உப்பாக ஆக்சிஜன் ஏற்றம் அடையச் செய்யும். இந்த உப்பை நைட்ரோபேக்டர் என்னும் குச்சிவடிவ உயிரி நைட்ரைட்டு என்னும் உப்பாக மாற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், என்னும், பருவத்தில், குச்சிவடிவ