தாவரவியல் :: மண்ணியல்
11. காடிநிலம் என்றால் என்ன?
பிச் 7-1 வரையுள்ளதுகாடித்தன்மையாகும். இத்தன்மையுள்ள நிலம் காடிநிலம்.
12. காடித்தன்மையை எவ்வாறு போக்கலாம்?
சுண்ணாம்பு சேர்த்துப் போக்கலாம்.
13. களைத்த நிலம் என்றால் என்ன?
ஒரு நிலத்தில் மாறிமாறிப் பயிரிடுவதால், அதிலுள்ள உப்புகள் தீர்ந்துவிடும். அது தன் வளத்தை இழக்கும். ஆண்டுதோறும் எருவிடுதல், செயற்கை உரமிடுதல் மூலம் இக்களைப்பைப் போக்கலாம்.
14. மண்நீர் வகைகள் யாவை?
1. புவிஈர்ப்புநீர் - இது தொடர்ந்து கிடைக்க மழை பெய்ய வேண்டும்.
2. நுண்துளை ஈர்ப்புநீர்- இது மண் இடைவெளிகளிலும் மண் துளைகளைச் சூழ்ந்தும் உள்ளது. தாவரங்களுக்குப் பெரிதும் பயன்படுவது.
3. ஈரப்பசை நீர்-நுண்துளை ஈர்ப்பு நீர்நீங்கியபின் உள்ள நீர்.
15. மண் அரிப்பு என்றால் என்ன?
தீமைதரும் அளவுக்கு மண் அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்கிறோம்.
16. இதன் வகைகள் யாவை?
1. இயற்கை அரிப்பு
2. செயற்கை அரிப்பு.
17. மண் அரிப்பிற்குரிய காரணிகள் யாவை?
காற்று, நீர், வெப்பம்.
18. மண்வினை என்றால் என்ன?
காடி, காரம், நடுநிலை ஆகிய பண்புகளில் ஏதேனும் ஒன்றை மண்பொருள்கள் மண்ணிற்கு அளிக்கும். இது அப்பொருள்கள் தரும் எச். அயனி, ஒஎச் அயனி ஆகியவற்றைப் பொறுத்தது.
19. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
மண் அரிப்பைத் தடுத்து, அதன் அமைப்பை நிலை நிறுத்தி, மண்வளத்தைப் பேணுவதற்கு மண்வளப் பாதுகாப்பு என்று பெயர்.
20. மண்வளப் பாதுகாப்பு முறைகள் யாவை?
1. காற்றைத் தடுத்து நிறுத்த மரங்களைப் பயிரிடுதல்.
2. நிலங்களைத் தரிசுபோடாமல் சாகுபடி செய்தல்.
3. மாற்றுப்பயிரிடல்.
4. அடிக்கடி நீர் பாய்ச்சுதல்.
5. எரு அடித்தல்.
6. புழுதிஉழுதல்.
7. எருவிடுதல்.
8. பாள முறையில் பயிரிடுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நீர், அரிப்பு, யாவை, பாதுகாப்பு, மண்வளப், போக்கலாம்