தாவரவியல் :: மண்ணியல்
1. மண்ணியல் என்றால் என்ன?
மண் தோற்றம், இயல்பு, பயன் முதலியவை பற்றி ஆராயுந்துறை. வேளாணியல் சார்ந்தது.
2. மண் என்பது யாது?
பயிர்கள் வாழத் தகுதியுள்ள புவியின் ஓடே மண்.
3. மண் உண்டாகக் காரணிகள் யாவை?
1. நீர்
2. காற்று
3. வெப்பம்
4. இயற்கைத் தேய்வு என்றால் என்ன?
இயற்கை ஆற்றல்களால் பாறை சிதைந்து மண்ணாதல்.
5. மண்ணில் கலந்துள்ள பொருள்கள் யாவை?
இவை இயைபு உறுப்புகள் ஆகும். கனி உப்புகள் மட்கிய தாவர விலங்குப் பொருள்கள், குச்சிவடிவ உயிரிகள், நீர், காற்று, வெப்பம், மணல், களிமண், குறுமண்.
6. எது வளமான மண்? எது சிறந்த மண்?
வளமான மண் தோட்டமண். சிறந்த மண் குறுமண்.
7. மண் காற்றோட்டம் என்றால் என்ன?
மண்ணில் காற்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மண்ணுக்கு உயிர்க்காற்று கிடைக்கும். கரிக்காற்று வெளியேறும்.
8. இதை ஏற்படுத்தச் சிறந்த வழி என்ன?
புழுதி உழுதல்.
9. மண்காற்றின் இன்றியமையாமை என்ன?
1. வேர் வளரவும்
2. மண் உயிர்கள் மூச்சுவிடவும் இக்காற்று இன்றியமையாதது.
10. காரநிலம் என்றால் என்ன?
பிச் 7-14 வரையுள்ளது. காரத்தன்மையாகும். இத்தன்மையுள்ள நிலம் கார நிலம்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், சிறந்த, காற்று