தாவரவியல் :: பயிர்ப் பதனத்திரட்டு
1. பயிர்ப்பதனத் திரட்டு என்றால் என்ன?
முறையாக அமைத்து உலர்த்தி உரிய முறையில் பாதுகாக்கப்படும் தாவரத்திரட்டு.
2. பயிர்ப்பதனத்திரட்டின் வகைகள் யாவை?
1. தனியார் பதனத்திரட்டு
2. கல்விநிலையப் பதனத்திரட்டு.
3. வட்டாரப் பதனத்திரட்டு.
4. தேசியப் பதனத்திரட்டு.
5. அனைத்துலகப் பதனத்திரட்டு.
3. இந்தியத் தேசியப் பயிர்ப்பதனத் திரட்டு எங்குள்ளது?
இது கோல்கத்தாவிலுள்ளது.
4. இதை நிறுவியது யார்? எப்பொழுது?
1793இல் ஆங்கிலக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் நிறுவினர்.
5. இதன் முதல் மேற்பார்வையாளர் யார்?
கர்னல் இராபர்ட் கிட்
6. இதிலுள்ள பயிர்ப்பதனத் திரட்டுகள் எத்தனை?
1 மில்லியனுக்கு மேல்.
7. வட்டாரப் பயிர்ப்பதனத் திரட்டு எங்குள்ளது?
கோயமுத்துாரில் உள்ளது.
8. பேராசிரியர் பைசன் அரும்பணி யாது?
இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரு திரட்டு ஒன்றை அமைத்துள்ளார்.
9. அனைத்துலகப் பயிர்ப்பதனத் திரட்டில் பழமையானது எது?
இங்கிலாந்தில் கியு என்னும் ஊரிலுள்ள அரசு தாவரவியல் தோட்டத்தில் அமைந்துள்ளது. 1969ஆம் மதிப்பீட்டின்படி இதில் 6,500,000 திரட்டுகள் உள்ளன.
10. பயிர் பதனத் திரட்டிலுள்ள நுட்பங்கள் யாவை?
1. சேகரித்தல்
2. அமுக்குதல்
3.உலர்த்துதல்
4. நச்சுப்படுத்தல்
5. பொருத்துதல்
6. வகைப்படுத்தல்
11. பயிர்பதனத் திரட்டின் பயன்கள் யாவை?
1. பல வகைப்பட்ட வகைப்பாட்டியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுவது.
2. இதில் உலகிலுள்ள எல்லாச்சிறப்பினங்கள் உள்ளதால், ஆராய்ச்சி செய்வது எளிது.
3. புவியியல் பரவலை அறியலாம்.
4. ஒரு நாட்டின் தாவரச் செல்வத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
5. தாவரவியலைக் கற்பிக்க உதவுகிறது.
6. தாவர வளப்புள்ளி விவரங்கள் இத்திரட்டினால் பாதுகாக்கப்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பயிர்ப் பதனத்திரட்டு - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயிர்ப்பதனத், பதனத்திரட்டு, திரட்டு, யாவை